ரிஷப ராசிக்கு செல்லும் செவ்வாய்...இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் தான்.
செவ்வாய் பெயர்ச்சியின் காரணமாக எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் கிரகம் தைரியம், வீரம், ஆற்றல் இவற்றிற்கு காரண கிரகமாக இருக்கும் நிலையில், இன்று ரேவதி நட்சத்திரத்தில் பிரவேசிக்க உள்ளார்.
செவ்வாய் கிரகம் ரிஷப ராசியினுள் நுழைகின்றார். இந்த நேரத்தில் தைரியம், தன்னம்பிக்கை, பலம் என அனைத்தும் அதிகரிக்குமாம்.

இந்த செவ்வாய் பெயர்ச்சியினால்இந்த மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு எந்தெந்த அதிர்ஷ்டம் கிடைக்கும், என்ன பலன் அடைவார்கள் என்று இங்கு கீழே காணலாம்.
மேஷம்
செவ்வாய் பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு அதிக லாபம் கிடைப்பதுடன், தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்றம் கிடைக்கும்.
உங்களது ஆளுமை திறன் மரியாதையை அளிப்பதுடன், செய்யும் வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் மனதிருப்தி கிடைக்கும். உங்களுக்கு எதிராக செயல்படுகிறவர்களை சுலபமாக நீங்கள் வெல்வீர்கள். நிதிநிலையில் நல்ல மாற்றம் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியினரின் வாழ்க்கையில் இந்த பெயர்ச்சியால் பெரிய மாற்றம் கிடைப்பதுடன், எந்த முயற்சி எடுத்தாலும் வெற்றியை அளிக்கின்றது. நிதி நிலைமை சீராகவும் இருக்கும்.
வியாபாரத்தில் அதிக லாபம் கிடைப்பதுடன், வேலையில் வெற்றி கிடைப்பதால் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். திறமைக்கேற்ற பலன் கிடைப்பதுடன், திருமண பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வாழ்க்கையில் அமைதி மற்றும் நிம்மதி கிடைக்கும்.

மீனம்
மீன ராசியினருக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதுடன், பல இடங்களில் இருந்து உதவிகளும் வந்து சேரும்.
உங்களது நிதி நிலைமை மாறுவதுடன், புதிய மனிதர்களையும் சந்திப்பீர்கள். அந்த நபர்களால் உங்களது வாழ்க்கை, தொழில் மற்றும் வியாபாரம் மாறும்.
குழந்தைகள் மூலமாக நல்ல செய்தி கிடைப்பதுடன், இந்த காலக்கட்டம் லாபம் தரும் காலமாக அமையுமாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |