கூலி வேலையில் 7 ரூபாய் சம்பளம் பெற்ற இளையராஜா! இவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
இசைஞானி இளையராஜா தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் இவரது சொத்து மதிப்பு குறித்த விபரத்தினை தெரிந்து கொள்வோம்.
இசைஞானி இளையராஜா
ஒட்டுமொத்த சினிமா துறையினையும் தனது பாடல்களால் கட்டிப் போட்டவர் தான் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி படத்தின் மூலம் தனது இசை பயணத்தினை தொடங்கியுள்ளார்.
ஜுன் 3ம் தேதி பிறந்த இவர் தனது 83வது வயதை தொடங்குகின்றார். ஆனால் கலைஞருக்கும் அதே தினத்தில் பிறந்தநாள் என்பதால் ஒரு நாள் முன்பே தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

தேனி மாவட்டத்தில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பினை பாதியில் விட்டுவிட்டு ஏழு ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்துள்ளார். அன்று அந்த ஏழு ரூபாய் புது நோட்டை சம்பளமாக வாங்கிய போது இருந்த மகிழ்ச்சி, தற்போது கோடிக்கணக்கில் வாங்கும் போது இல்லை என்றும் சமீபத்தில் கூறியிருந்தார்.
இசைஞானி இளையராஜாவிற்கு சுமார் 795-800 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாகவும், படங்களுக்கு ஓரளவிற்கு சம்பளம் வாங்கினாலும், லைவ் சிம்பனி, கண்டிப்பான காப்பி ரைட்ஸ், இசை லேபில்கள் இதன் மூலமும் வருமானம் வருகின்றது.

சொந்த வீடு, அலுவலகம், கார்கள் என வைத்திருக்கும் இவர் யூடியூப்பில் தனது பாடல்கள் மூலமாக 34 லட்சம் வரை சம்பாதிப்பதாக கூறப்படுகின்றது.
திரையுலகில் சில ஆயிரமாக இருந்த இவரது சம்பளம் தற்போது 100 வது படத்திற்கு பின்பு தான் ரூ.1 லட்சம் கிடைப்பதாக கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |