தொண்டை கரகரப்புக்கு தீர்வாகும் சுக்கு மல்லி காபி! 5 நிமிடத்தில் தயார் செய்வது எப்படி?
பொதுவாக தற்போது இருக்கும் குழந்தைகளுக்கு காலங்கள் செல்ல நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே செல்கின்றது.
இதற்கு முக்கிய காரணம் அவர்களின் உணவு பழக்கவழக்கங்கள் தான்.
அந்தவகையில் நாளுக்கு நாள் நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை க்கு மல்லி காபி கொடுக்கின்றது என்றால் நம்ம முடிகின்றதா?
ஆம், அடிக்கடி சுக்கு மல்லி காபி குடிப்பதால் அடிக்கடி காய்ச்சல் ஏற்படல், தொண்டை கரகரப்பு, சளி பிரச்சனைகள் உள்ளவர்கள் இது சிறந்த தீர்வை தருகின்றது.
அந்த வகையில் சுக்கு மல்லி காபி எப்படி தயாரிப்பது? மற்றும் அதில் என்ன என்ன நன்மைகள் இருக்கின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
காபி செய்ய தேவையான பொருட்கள்
- சுக்கு – 1/2 கப்
- மல்லி – 1/4 கப்
- மிளகு – 1/2 தேக்கரண்டி
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- தண்ணீர் – 2 கப்
- பனங்கற்கண்டு – தேவையான அளவு
சுக்கு மல்லி காபி செய்வது எப்படி?
முதலில் காபிக்கு தேவையான சுக்கு மற்றும் மல்லி எடுத்து பொடித்து கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சுக்கு , மல்லி , மிளகு மற்றும் சீரகம் ஆகிய பொருட்களை ஒன்றாக போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுத்தெடுத்து கொள்ளவும்.
வறுத்து அதனை ஒரு தட்டில் கொட்டி சற்று நேரம் ஆற வைக்கவும் ஆறிய கலவையை மிக்ஸியில் போட்டு பவுடர் போல் அரைத்தெடுக்கவும்.
இது ஒருபுறம் இருக்கையில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் காபிக்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு தயார் செய்த காபி பவுடரை போட்டு கொதிக்க விடவும்.
கொதித்து கொண்டிருக்கும் போது தேவை என்றால் பனங்கண்டு சேர்த்து கொள்ளாலாம்.
கற்கண்டு நன்றாக கரைந்ததும் காபியை வடித்து டம்பளரில் ஊற்றினால் சூப்பரான மற்றும் ஆரோக்கியமான சுக்கு மல்லி காபி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |