காய்ச்சல், இருமலுக்கு இந்த டீ ஒரு கிளாஸ் போதும்! அந்த டீ எப்படி போடணும்னு தெரியுமா?
பொதுவாக சமையலுக்கு பயன்படுத்தும் சில பொருட்களை கொண்டு உடல் ஆரோக்கியத்தை பேணலாம்.
சமையலுக்காக பயன்படுத்தும் பட்டை, கருவா, கறிவேப்பிலை, மிளகு, கடுகு, மஞ்சள் ஆகிய பொருட்கள் சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்காகவும் சேர்க்கப்படுகின்றது.
உதாரணமாக வாசணைக்காக சமையலுக்கு போடும் கிராம்பை எடுத்துக்கொண்டால் பல் வலி முதல் செரிமான பிரச்சனை, சளி தொந்தரவு, வயிறு எரிச்சல், உடல் எடைக்குறைப்பு உள்ளிட்ட அணைத்து பிரச்சினைகளையும் நொடிப்பொழுதில் சரிச் செய்கின்றது.
இதனால் தான் ஆங்கில மருந்து வில்லைகளை விட ஆயுள் வேத முறைப்படி செய்யும் மருத்துவம் சிறப்பு வாய்ந்தது என எமது முன்னோர்கள் அடிக்கடி கூறுவார்கள்.
அந்த வகையில் கிராம்பை பயன்படுத்தி எவ்வாறு டீ தயாரிப்பது என்பதனையும் அதிலிருந்து கிடைக்கும் நன்மைகள் குறித்தும் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்கள்
- கிராம்பு – 4
- தண்ணீர் – 1 கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கிராம்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.
இனிப்பு சுவை வேண்டும் என்றால் கிராம்பு டீயில் 2 மேசைக்கரண்டி அளவு தேன் சேர்க்கலாம். அத்துடன் மேலதிகமாக சுவை தேவைப்பட்டால் எலுமிச்சைச்சாறு இரண்டு துளிகள் விடலாம்.
இவ்வாறு செய்து ஒரு டம்பளரில் ஊற்றி எடுத்தால் சூப்பரான கிராம்பு டீ தயார்!
டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
1. சமையலுக்காக நாம் எடுக்கும் கிராம்பில் அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதனை டீயில் சேர்த்து குடிப்பதால் “நோய் எதிர்ப்பு சக்தி” அதிகரிக்கின்றது.
2. காய்ச்சல், சளி, இருமல் ஆகிய பிரச்சினையுள்ளவர்கள் தினமும் காலையில் சிறிதளவு கிராம்பு டீ குடிக்கலாம். அத்துடன் இதில் நுண்ணங்கிகளை விரட்டியடிக்கும் ஆற்றல் இருக்கின்றது.
3.ஒரு கிராம்பில் நாம் எதிர்பார்க்காத அளவு வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே இருக்கின்றது. இது பாக்டீரியா தொற்றுக்கு எதிராக போராடி எம்மை பாதுகாக்கின்றது.
4. செரிமான பிரச்சனைக்கு தீர்வு காண்பதோடு, உடல் எடைக்குறைப்பிலும் கிராம்பு டீ உதவியாக உள்ளது.
5. ஈறு மற்றும் பல் வலி என்றால் நாம் முதலில் தேடுவது கிராம்பை தான் காரணம் இதற்கு பக்ரீயாவிற்கு எதிராக போராடும் சக்தி இருக்கின்றது.
வருத்தம் கொடுக்கும் பல்லில் கிராம்பை வைக்க வேண்டும். இது பல் வலியிலிருந்து நிவாரணம் தருகின்றது.
6. சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் கிராம்பு டீயை தாராளமாக குடிக்கலாம். இது சிறந்த மருந்தாக உள்ளது.
7. தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கூட இதிலிருந்து சரியாகின்றது.