டார்க் சாக்லேட் பிரியாரா நீங்கள் இனிமேல் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்!
பொதுவாகவே இனிப்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் சொக்லேட் என்றால் சிரியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவார்கள்.
டார்க் சாக்லெட்டில் நச்சுப் பொருட்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடியகிறதா?
நச்சுப் பொருட்கள்
டார்க் சாக்லேட்களில் இரண்டு வகையான நச்சு பொருட்கள் உள்ளதாக ஒரு புதிய ஆய்வின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நியூயோர்க்கைச் சேர்ந்த கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ் ஹெர்ஷே, லின்டிட், டோனியின் சாக்கோலோன்லி உள்ளிட்ட பிரபலமான 28 டார்க் சாக்லேட் பார்களை ஆய்வுக்கு உட்படுத்தியது.
அந்த ஆய்வின் முடிவில் அனைத்து டார்க் சாக்லேட்டிலும் காட்மியம், ஈயம் ஆகிய இரண்டு நச்சு உலோகங்கள் உள்ளன என தெரியவந்துள்ளது. அவை பலவித உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துமாம்.
உடற்பிரச்சினைககள்
இந்த இரண்டு நச்சுப் பொருட்களிலும் நுரையீரல், நினைவுப் பிரச்சினை, கேன்சர் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.
டார்க் சாக்லேட் தயாரிக்க அதிகம் கொக்கோ பீன்ஸ் தான் பயன்படுத்தப்படுகிறது. காட்மியம் என்பது மண்ணில் காணப்படும் ஒர் இயற்கை தனிமம். இது சில நேரங்களில் கொக்கோ தாவரத்தின் வேர்களால் உறிஞ்சப்பட்டு கொக்கோ பீன்ஸை சென்றடைகிறது.
மற்றொன்றான ஈயம், திறந்தவெளியில் பீன்ஸை காய வைக்கும் போது காற்று மூலம் ஊடுருவுகிறது ஈயம் மனிதர்களுக்கு ஆபத்தானது என நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
இதனால் நினைவாற்றல் இழப்பு, வயிற்று வலி, புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலும் இந்த உலோகத்தின் அதிக செறிவுகள் குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இதனால் அவர்கள் கற்றல் மற்றும் நடத்தல் திறன்கள் பாதிக்கப்படுகின்றன. காட்மியத்தின் குறைந்த அளவு உடலில் சேர்ந்தால் கூட சிறுநீரக புற்றுநோய் ஏற்படவும், உடலில் உள்ள எலும்புகள் வலுவிழந்துபோகவும் வாய்ப்புள்ளது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) சாக்லேட் பார்களில் ஈயம் மற்றும் காட்மியம் இரண்டிற்கும் தேசிய வரம்பு அமைக்கப்படவில்லை.
எச்சரிக்கை
அதிகபட்சமாக 0.5 மைக்ரோகிராம் ஈயம் மற்றும் 4.1 மைக்ரோகிராம் காட்மியம் டார்க் சாக்லேட்டில் இருக்கலாம்.
ஆனால் பரிசோதிக்கப்பட்ட 28 சாக்லேட்டுகளில் 23ல் ஈயம் அளவுகள் இதை விட இரண்டரை மடங்கு அதிகமாகவும், காட்மியம் அளவு மூன்று மடங்கு அதிகமாகவும் இருந்தது.
காட்மியம் மற்றும் ஈயம் அதிகம் உள்ள சாக்லேட்டுகள் உடனடியாக தீங்கு விளைவிக்க வாய்ப்பில்லை எனவும் நீண்ட காலத்திற்கு பிறகுதான் இதன் விளைவுகள் தெரியும் என நுகர்வோர் அறிக்கையின் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வு நடத்திய நிறுவனத்தின் உணவுப் பாதுகாப்பு ஆய்வாளர் துண்டே அகின்லே என்பவரே இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.