பொது நிகழ்ச்சியில் ஜனாதிபதி செய்த காரியம்: படம்பிடித்துக்காட்டிய ஊடகவியலாளர்கள் கைது! வைரலாகும் வீடியோ காட்சி
தென் சூடானின் ஜனாதிபதி சிறுநீர் கழிக்கும் காட்சியை படம்பிடித்த ஆறு ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி
தென் சூடான் ஜனாதிபதியான ல்வா கீர் (71 வயது) கடந்த டிசம்பரில் சாலை கட்டுமானத்தை தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ விழாவில் கலந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அவர் தேசிய கீதம் பாடுவதற்கு எழுந்து நின்றபோது அவர் அணிந்திருந்த சாம்பல் நிற காற்சட்டையில் காலடி வரை சிறுநீர் கழித்திருந்தது அங்குள்ள கேமராக்களில் பதிவாகியிருந்தது.
மேலும், 2011ஆம் ஆண்டு தெற்கு சூடான் சுதந்திரம் பெற்றது. அன்றிலிருந்து ஜனாதிபதி பொறுப்பிற்கு வந்தவர் தான் சல்வா கீர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகவியளாலர்கள் கைது
இவ்வாறு ஜனாதிபதி சிறுநீர் கழிக்கும் காட்சியானது சில சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்நது.
எனினும் இந்த காணொளி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை என்றும், சமூக ஊடகங்களில் இது பரவியதையடுத்து, நிகழ்வை செய்தி சேகரிக்க வந்த 06 ஊடகவியலாளர்கள் நாட்டின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் தேசிய ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆறு ஊடகவியலாளர்களையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் மிரட்டல் அல்லது கைது அச்சுறுத்தல் இல்லாமல் பணியாற்ற முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் ஆப்பிரிக்காவின் பிரதிநிதியான Muthoki Mumo தெரிவித்திருந்தார்.