சக மாணவர்களை சுட்டு கொன்று விட்டு பொலிஸாருக்கே தகவலை லீக் செய்த சிறுவன்! ஷாக்கில் இணையவாசிகள்
பெல்கிரேட்டிலுள்ள பாடசாலையொன்றில் மாணவரொருவர் சக நண்பர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்ற செய்தி இணையவாசிகளை பீதியடைய வைத்துள்ளது.
பாடசாலையில் ஏற்பட்ட கோரம்
பொதுவாக பாடசாலை காலத்தில் சக நண்பர்களுடன் குழந்தைகள் சண்டையிடுவது வழக்கம்.
இதனால் அவர்கள் பாடசாலையில் அல்லது வீட்டு செல்லும் வழியில் சண்டையிட்டு கொள்வார்கள். ஆனால் அதனையும் தாண்டி சிறுவனொருவன் தன்னுடைய சக நண்பர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளான்.
செர்பிய தலைநகர் பெல்கிரேட்டின் மத்தியில் உள்ள விளாடிஸ்லாவ் ரிப்னிகர் என்ற பாடசாலையில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
கைது செய்த பொலிஸார்
இது தொடர்பில் பாடசாலையிலுள்ள ஆசிரியர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இறந்து கிடந்த மாணவர்களை மீட்டுள்ளதுடன், விசேட படை போட்டு குறித்து சிறுவனையும் கைது செய்துள்ளார்கள்.
மேலும் இந்த விவகாரத்தில் நான்கு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த செய்தி அப்பகுதி மக்கள் பீதியடைய வைத்துள்ளதுடன், சிறுவன் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என பொலிஸார்களும் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.