ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்தது உண்மையா? திடுக்கிடும் திருப்பம்! கணவர் வெளியிட்ட பகீர் உண்மை
ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்ததாக கூறிய பெண்ணை காணவில்லை என அவரது கணவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த Gosiame Sithole(37) என்ற பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்ததாக கூறப்பட்டதுடன், மிகப்பெரிய சாதனையாகவும் பார்க்கப்பட்டது.
தற்போது இது தொடர்பாக பெண்ணின் கணவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது மனைவிக்கு பிரசவவலி வந்ததையடுத்து கடந்த ஜூன் 7ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதித்தோம்.
அதன்பிறகு நானும், எனது குடும்பத்தினரும் எனது மனைவியை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. தனக்கு வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பிய தனது மனைவி, தனக்கு ஒரே பிரசவத்தில் 7 ஆண் மற்றும் 3 பெண் குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறினார்.
ஆனால் ஒரே ஒரு குழந்தையின் புகைப்படத்தை மட்டுமே தனக்கு அனுப்பினார். கொரோனா காரணமாக குழந்தைகளை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை எனவும், நானும் இதுவரை குழந்தைகளை பார்க்கவில்லை எனவும் அவர் கூறியதாக Gosiame Sithole வின் கணவர் கூறியுள்ளார்.
மேலும், தான் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மனைவி தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். பல நாட்கள் ஆகியும் இதுவரை தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்காததால், தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் உண்மையிலையே என்ன நடந்தது? அந்த பெண்ணிற்கு 10 குழந்தைகள் பிறந்தது உண்மையா அல்லது பொய்யா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
