காணாமல் போன இரண்டு சிறுமிகள்... காட்டுக்குள் மரத்தில் சடலமாக தொங்கிய கொடுமை! நடந்தது என்ன?
அசாம் மாநிலத்தில் காணாமல் போன இரண்டு சகோதரிகள், மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு அசாமின் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இருதினங்களுக்கு முன்பு 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்.
அக்கம் பக்கத்தில் தேடியும் சிறுமிகள் கிடைக்காததால், இருவரையும் கண்டுபிடித்துத் தருமாறு அவர்களது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் அன்று இரவே அக்கிராமத்திலுள்ள ஒரு காட்டுக்குள் சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்கிய நிலையில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக கோக்ராஜர் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.