நீரிழிவு நோயாளிக்கு ஏன் பக்கவாத பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது!
Diabetes
By Sinduja
நீரிழிவு நோய் ஒருவருக்கு வந்தாலே எல்லா நோயும் கூடவே சேர்ந்து வந்துவிடும் என்பது உண்மை. இன்னும் கூறப்போனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதமும் கூடவே சேர்ந்து வந்துவிடும் வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகின்றது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் பக்கவாத நோயினால் இரண்டு நிமிடத்துக்கு ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றார்.
சரி இனி நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதற்கான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.
image - bbc
- சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கொலஸ்ட்ரோல், சிறுநீரக பாதிப்பு, உடல் பருமன், இருதய நோய், ரத்த கொதிப்பு போன்றவையும் இருப்பதால் பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
- சர்க்கரை வியாதி கட்டுக்குள் இல்லாதபோது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதனால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
- ரத்த நாளங்களில் தமனிக்குழாய் தடிப்பு ஏற்பட்டு, ரத்த நாளங்களில் அடைப்பு உருவாகிறது. இது மூளைக்குச் செல்லும் ஒட்சிசன் அளவை குறைத்து பக்கவாதத்தை ஏற்படுத்துகின்றது.
பக்கவாதம் வராமல் இருக்க சர்க்கரை வியாதிகள் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?
- புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கத்தை விட்டொழித்தல்.
- காய்கறிகள், பழங்கள், கீரைகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்தல்.
-
கொலஸ்ட்ரோல், ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைத்தல்.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US