எளிதில் மற்றவர்களிடம் ஏமாறும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?
மனிதர்களாகப் பிறக்கும் ஒவ்வொருவரும் நிறம், தோற்றம், உயரம், ஆளுமை, திறமைகள் மட்டுமின்றி, தங்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்களிலும் தனித்துவமான வேறுபாடுகளைக் கொண்டிருப்பது இயல்பு.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவர் பிறந்த ராசி அவர்களின் குணநலன்கள், திறமைகள் மற்றும் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

அந்த வகையில், யார் என்ன சொன்னாலும் எளிதில் நம்பி, தங்களின் அப்பாவித்தனத்தால் சில நேரங்களில் ஏமாறக்கூடிய அப்பாவி குணம் கொண்ட ராசிகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்

மீன ராசியில் பிறந்தவர்கள் அதீத கற்பனைத் திறன், கருணை மற்றும் இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். யாராவது தங்களிடம் உதவி என்று கேட்டுவிட்டால், மறுக்க மனமில்லாமல் தயங்காமல் உதவும் நல்ல மனம் இவர்களுக்கு உண்டு.
ஆனால், இவர்களின் இந்த இரக்க குணமே பல நேரங்களில் வாழ்க்கையில் அதிக ஏமாற்றங்களை சந்திக்கவும் காரணமாகிவிடுகிறது.
இவர்களின் நல்ல மனதையும், உதவும் குணத்தையும் சிலர் தங்களின் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ள நேரிடும். யார் என்ன சொன்னாலும் பின்னணி காரணம் குறித்து சிந்திக்காமல் நம்பும் குணம் இவர்களிடம் இருக்கும்.
தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்கள் தங்களின் சுதந்திரமான குணத்திற்கும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மைக்கும் பெயர் பெற்றவர்கள். மனதுக்கு பிடித்தவர்கள் சொல்லும் அனைத்து உண்மையாகவே இருக்கும் என்று உறுதியாக நம்புவார்கள்.
எந்த விஷயத்தையும் மனதில் வைத்துக்கொண்டு மறைப்பதைவிட, வெளிப்படையாக பேசுவதையே விரும்புவார்கள். குடும்ப சூழல், பொருளாதார நிலை என தனிப்பட்ட விஷயங்களைக்கூட ரகசியமாக வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் குணம் இவர்களிடம் இருக்கும்.
ஆனால், இவர்களின் இந்த வெளிப்படைத்தன்மையே சில சமயங்களில் இவர்களுக்கு எதிராகத் திரும்பிவிடும். இவர்களின் தனிப்பட்ட விஷயங்களையும் ரகசியங்களையும் தெரிந்துகொள்ளும் சிலர், சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதையே இவர்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடும்.
துலாம்

உதவி செய்து, அதற்குப் பதிலாக ஏமாற்றத்தை சந்திப்பதில் துலாம் ராசியினரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்றால் அது மிகையாகாது.
தங்களிடம் வசதி இல்லாத நேரத்தில்கூட, மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும்.
ஆனால், இவர்களின் அளவற்ற உதவும் மனப்பான்மையே பல சந்தர்ப்பங்களில் இவர்களை பிரச்சினைகளில் சிக்க வைப்பதுடன், எதிர்பாராத ஏமாற்றங்களையும் சந்திக்கச் செய்கிறது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |