மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள் என்னென்ன? அதிலிருந்து எவ்வாறு மீள்வது
பொதுவாகவே இன்று பலரைத் தாக்கும் நோய்களில் பக்கவாதமும் ஒன்று. இந்த நோயிலிருந்து எவ்வாறு மீள்வது அதன் அறிகுறிகள் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பக்கவாதம் எனப்படுவது மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்பட்டு மூளை இயக்கத்திற்கு தேவையாள சக்தி இல்லாமல், மூளையின் செல் தசைகள் பாதிக்கப்படுவதுதான்.
இந்த பாதிப்பு இரண்டு வகைப்படும். மூளைக்கு இரத்த ஓட்டம் சரியாக செல்லவில்லை என்றால் அது இஸ்கிமிக் பக்கவாதம் மற்றொற்று மூளையில் இரத்த கசிவால் ஏற்படும் பக்கவாதம் இரத்தக் கசிவு பக்கவாதம் எனப்படும்.
உலக சுகாதர ஸ்தாபனம் சொல்கிறது நான்கில் ஒருவருக்கு கண்டிப்பாக இந்தப் பக்கவாதம் இருக்கும். இந்தப்பக்கவாதத்தை குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
அறிகுறிகள்
அதாவது BE FAST என்பதன் மூலம் உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
- Balance: உடற்சமநிலை இழத்தல்
- Eyes: கண் பார்வை இழத்தல்
- Face: முகம் ஒரு புறமாக இழுத்து கொள்ளுதல்
- Arm: ஒரு பக்க கை கால்கள் பலவீனமடைந்து செயல்பட இயலாதது
- Speech: பேச இயலாமலோ அல்லது பேச்சில் குளறுதல்
- Time: மருத்துவ உதவியை நாடுதல் (இது தான் முக்கியமானது)
ஏனெனில் மேற்குறித்த அறிகுறிகள் எல்லாம் தென்பட்டால் 4 மணிநேரத்திற்குள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொள்ள வேண்டும் இல்லையெனில் கை, கால் முடக்கம் ஏற்படும்.
எவ்வாறு தடுப்பது
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தல்
ஆரோக்கியமான எடையை பராமரித்தல்
புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பழக்கத்தை தவிர்த்தல்
வாரத்திற்கு 5 முறை உடற்பயிற்சி செய்தல்
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தல்
மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை குறைத்துக் கொள்ளல்