தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்போது சீரகத்தை இதில் கலந்து யூஸ் பண்ணுங்க - தீர்வு இரண்டே வாரத்தில்..
பொதுவாக பெண்களின் தோற்றத்தில் முக்கிய பங்கை தலைமுடி எடுத்து கொள்கின்றது.
ஆரோக்கிய பிரச்சினை காரணமாகவும், சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினாலும் அதிகமானோருக்கு வயது இருக்கும் போதே தலைமுடி கொட்டி போகின்றது.
இதனை தடுப்பதற்கு இரசாயன பொருட்களை பயன்படுத்துவதை விட சமையறையிலுள்ள மூலிகைப் பொருட்களை பயன்படுத்தலாம்.
அந்த வகையில் தலைமுடி உதிர்வை தடுக்கும் ஒரு சூப்பரான டிப்ஸை தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
- சீரக விதை பொடி - 1 தேக்கரண்டி
பேக் செய்முறை
ஒரு பவுலை எடுத்து அதில் தேங்காய் எண்ணெயை விட்டுக் கொள்ளவும்.
பின்னர் அதில் விதை பொடியை சேர்க்க வேண்டும். இவை இரண்டையும் மிதமான வெப்பநிலையில் நன்றாக சூடாக்க வேண்டும்.
அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக ஆற விடவும். குளிக்கும் முன்னர் தலைக்கு வேர் முதல் நுனி முடி வரை நன்றாக தடவி கொள்ளவும்.
பின்னர் லேசாக மசாஜ் செய்து கொள்ளவும்.
சரியாக 20 முதல் 30 நிமிடங்கள் வைத்து விட்டு வெந்நீரை கொண்டு தலைமுடியை அலசவும்.
இவ்வாறு வாரத்திற்கு இரண்டு தடவைகள் செய்ய வேண்டும். நிச்சயம் பலன் தெரியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |