தொப்பையை வெண்னை போல் கரைக்கனுமா? இந்த மேஜிக் பானத்தை குடிச்சா போதும்!!
இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரிப்பது அனைவரையும் வாட்டி வதைக்கும் பிரச்சனையாக உள்ளது.
வயிற்று கொழுப்பைக் குறைப்பது அவ்வளவு எளிதானது அல்ல.
எனினும், அனைவரது வீட்டிலும் இருக்கும் சீரகம் இதில் உங்களுக்கு கை கொடுக்கும்.
இதை பயன்படுத்தி இந்த பிரச்சனைக்கு எளிதில் தீர்வு காணலாம்.
இவற்றை வைத்து தயாரிக்கப்படும் ஒரு மேஜிக் பானத்தை பற்றி தான் இன்று பார்க்க போகின்றோம்.
சீரக தண்ணீரை தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
- சீரக விதைகள்
- தண்ணீர்
- எலுமிச்சை சாறு
செய்முறை
சீரக தண்ணீர் தயார் செய்ய, 2 தேக்கரண்டி சீரக விதைகளை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
காலையில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆறியதும் பருத்தி துணியால் வடிகட்டவும்.
பின், இந்த பானத்தில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும்.
தொடர்ந்து 2-3 வாரங்கள் குடித்து வந்தால் அதன் பலன் தெரியும்.
நீங்கள் விரும்பினால், சீரக விதைகளை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். சீரகப் பானத்தை எளிதில் தயார் செய்ய விரும்பினால், அதை அரைத்து பொடி செய்து, ஒரு ஸ்பூன் சீரகப் பொடியை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும்.
சாப்பிட்ட பிறகு இந்த பானத்தை குடித்தால், அதிக பலன்கள் கிடைக்கும்.