குடலில் உள்ள அழுக்குகளை மலத்துடன் வெளியேற்றும் லேகியம்
தற்போது நடைமுறையில் இருக்கும் வாழ்க்கைமுறையால் உணவு பழக்கங்கள் நாளுக்கு நாள் வித்தியாசப்படுகின்றன.
இந்த மாற்றத்தால் 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகி விடுகிறோம்.
நமது உடலில் ஏற்படும் எல்லா நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தை நாட முடியாது. அதற்கு பதிலாக வீட்டிலுள்ள சில மூலிகை பொருட்களை கொண்டு கை மருந்து செய்து குடிக்கலாம்.
இது நோயை நிரந்தரமாக சரிச் செய்து நல்லதொரு பலனை கொடுக்கும்.
அந்த வகையில் வயிற்றில் ஏற்படும் நாள்ப்பட்ட நோய்களை குணப்படுத்தும் பொடி எப்படி தயாரிப்பது? மற்றும் அதனை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வயிற்றை சுத்தப்படுத்தும் லேகியம்
தேவையான பொருட்கள்
- ஃப்ளாக்ஸ் விதைகள் – ஒரு கப்
- பரங்கிக்காய் விதைகள் – அரை கப்
- கிராம்பு – 15
- ஆலிவ் எண்ணெய் – தேவையான அளவு
லேகியம் செய்முறை
ப்ளாக்ஸ் விதைகள் மற்றும் பரங்கி விதைகள் இரண்டையும் தனித்தனியாக அரைத்து போத்தலில் போட்டு வைத்து கொள்ளவும். அதில் முழு கிராம்பையும் சேர்த்து கொள்ளவும்.
பின்னர் அந்த பொடியை தனியாக எடுத்து ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். அந்த கலவையை போத்தலுடன் அப்படியே பாத்திரத்தில் வைத்து சூடாக்கவும்.
சூடானதும் வடிக்கட்டி மற்றுமொரு போத்தலுக்கு கலவையை மாற்றி காற்று போகாதவாறு அடைத்து வைக்கவும்.
இந்த லேகியத்தை தினமும் உறங்கச் செல்லும் முன்னர் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு விட்டு படுத்துக் கொள்ளவும். இது உங்களில் வயிற்றிலுள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |