முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சனையா? வெள்ளரிக்காய் செய்யும் அற்புதம்
வெள்ளரிக்காய் முகப்பொழிவிற்கு எவ்வாறு உதவி செய்கின்றது என்பதையும், இதனை எப்படி நாம் பயன்படுத்தலாம் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
எண்ணெய் வழியும் முகம்
இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் தங்களது அழகை கட்டுக்குள் வைப்பதற்கு பல வழிகளை பின்பற்றி வருகின்றனர்.
சில தருணங்களில் என்னதான் முக்கியத்துவம் கொடுத்தாலும், முகம் எண்ணெய் வழியும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது. இதனை வெள்ளரிக்காய் சரிசெய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா?
வெள்ளரிக்காய் இயற்கையாகவே உங்களது சருமத்திற்கு இதமானவையாக உள்ளது. மேலும் வைட்டமின் சி மற்றும் காஃபிக் அமிலம் இதில் உள்ளது.
இவை வீக்கமடைந்த சருமத்தை குறைக்கவும், சருமத்தை முழுவதுமாக ஹைட்ரேட் செய்யவும் உதவுகின்றது. ஐஸ் கட்டிகளும் நமது முகத்தை எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகின்றது.
இனி, விலையுயர்ந்த தோல் பராமரிப்புப் பொருட்கள் வாங்குவதை விட குறைந்த செலவில் வீட்டில் இந்த ஐஸ் கட்டிகளை தயார் செய்துவிடலாம்.
செய்முறை
முதலில் வெள்ளரிக்காயை ஜுஸ் எடுத்து அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து ஐஸ் ட்ரேயில் ஊற்றி உறைய வைக்க வேண்டும்.
உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் ஐஸ் கட்டியை மெதுவாக தேய்க்கவும், பின்னர் 15 நிமிடங்களுக்குப் பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
by Michelle Bruhn
இவ்வாறு செய்வதால் முகத்தில் எண்ணெய் உற்பத்தி குறைவதுடன், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கும் தீர்வு அளிக்கின்றது. மேலும் கருவளையங்களையும் நீக்குகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |