சிறுதானிய சர்க்கரை பொங்கல்: நீரிழிவு, டயட்ல இருக்கறவங்க சாப்பிடலாமா?
பொதுவாக சிறுதானியங்களை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் தண்ணீர் விடயத்தில் அதிகம் கவனம் செலுத்தல் வேண்டும்.
தானியங்களின் வகைகளுக்கு ஏற்ப சரியான அளவில் தண்ணீர் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும்.
இந்த உணவுகள் உடலுக்கு உடனடியாக ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும்.
அந்த வகையில் சிறுதானியங்களை பயன்படுத்தி செய்யக் கூடிய உணவுகளில் ஒன்று தான் பொங்கல்.
இதனை 4 வகை சிறுதானியங்களை பயன்படுத்தி சுவையாக செய்யலாம்.
இதன்படி, முக்கியமான 4 வகை தானியங்களை வைத்து எப்படி பொங்கல் செய்யலாம் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
தினை சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்
- பாசிப்பருப்பு - கால் கப்
- தினை அரிசி - 1 கப்
- தண்ணீர் - 3 கப்
- பால் - 1 கப்
- வெல்லம் - 2 கப்
- முந்திரி - 20
- திராட்சை - 20
- ஏலக்காய் பொடி - சிறிதளவு
- நெய் - 5 ஸ்பூன்
பொங்கல் செய்வது எப்படி?
தானியங்களின் ஒன்றான பாசிப்பருப்பை எடுத்து வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.
அதே படிமுறையில் தினையையும் வறுத்து தனியாக வைக்கவும்.
தொடர்ந்து குக்கரில் தினை சேர்த்து கொள்ளவும்.ஒரு கப் தினை- 4 மடங்கு தண்ணீர் சேர்க்கவும். அதில் ஒரு கப் அளவு பால் சேர்ப்பது நல்லது. 4- 5 விசில் வரும் வரை நன்கு வேக விட வேண்டும்.
விசில் ரிலீசானதும் குக்கரை திறந்து ஒரு கரண்டியால் நன்கு குழைத்து விடுங்கள்.
மற்றொரு கடாயில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கரைய விடுங்கள்.
வெல்லம் கரைந்த பின்னர் பாசிப்பருப்பு கலந்து நன்கு கிளறி விடுங்கள்.
மிதமான வெப்பநிலையில் பொங்கலை வைத்திருக்கும் பொழுது பொங்கல் இன்னும் கெட்டியாக மாறும்.
கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்து கிளறிவிட்டு, நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து பொங்கலில் கொட்டினால் சுவையான தினை பொங்கல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |