பிரியங்காவை மிரட்டிய குணசேகரன்.. அம்மாவிடம் சவால் விட்டு வெற்றி பெற்றாரா?
பிரியங்காவை மிரட்டி தங்கள் அணிக்கான புள்ளிகளை குணசேகரன் பெற்றார் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் ஸ்டார் மியூசிக் சீசன் 4.
இந்த சீசன் மற்றைய சீசன்களை விட மிகவும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் சென்றுக் கொண்டிருக்கிறது.
மற்றைய சீசன்களை போல் இந்த சீசனையும் தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்காவின் நிகழ்ச்சி என்றாலே அதற்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறார்கள்.
எதிர்நீச்சல் அம்மா - மகன் போட்டி
இந்த நிலையில் இந்த வாரம் ஸ்டார்ட் மியூசிகில் சீரியல் அம்மாக்களும் சீரியல் அப்பாக்களும் இரண்டு அணி போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளார்கள்.
அதில் குணசேகரன் என்கிற மாரிமுத்துவுடன் ஏனைய இரண்டு பிரபல நடிகர்கள் கலந்து கொண்டார்கள்.
அத்துடன் எதிர் அணியில் குணசேகரனின் அம்மாவாக இருக்கும் விசாலாட்சி கலந்து கொண்டுள்ளார்.
அம்மாவுக்கும், மகனுக்குமான போட்டி இந்த நிகழ்ச்சி சற்று விறுவிறுப்பாக இருந்துள்ளது. எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த போட்டியாக இருந்திருக்கும்.