நன்றி பிரியங்கா.. ஷோவை ஆரவாரப்படுத்திய பாரதி கண்ணம்மா குழுவினர்! இறுதி நடந்த டுவிஸ்ட்
வெண்பாவிற்கு ஷோவில் வைத்து புதிய ஜோடி சேர்த்த தொகுப்பாளர் பிரியங்காவின் காட்சி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.
ஸ்டார்ட் மியுசிக் சீசன் 4
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் ஸ்டார் மியூசிக் சீசன் 4.
இந்த சீசன் மற்றைய சீசன்களை விட மிகவும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் சென்றுக் கொண்டிருக்கிறது.
மற்றைய சீசன்களை போல் இந்த சீசனையும் தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்காவின் நிகழ்ச்சி என்றாலே அதற்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறார்கள்.
வெண்பாவிற்கு ஜோடியாகும் பாடகர்
இந்த நிலையில் இந்த வாரம் ஸ்டார்ட் மியுசிக் சீசன் 4 ல் பாரதி கண்ணம்மா சீரியல் குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளார்கள்.
அதில், வெண்பா, கண்ணம்மா, பாரதியின் அம்மா உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் கலந்து கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பாடிய பாடகருடன் வெண்பாவை இணைத்து சில நகைச்சுவை சம்பவங்களை செய்துள்ளார்.
இதனால் அங்கிருந்த வெண்பாவும், பாடகரும் பிரியங்காவிற்கு “ நன்றி” கூறியுள்ளார்கள். இதனை பார்த்த ரசிகர்கள்,“ வெண்பாவின் புதிய ரசிகரா? ” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.