சீரியல் ஜோடிக்காக தலைகீழாக நடந்து வந்த பிரபலம்! வாயை பிளந்த பிரியங்கா
பிரபல டிவி ஷோவில் சீரியல்களில் நடிக்கும் கதாநாயகர் ஒருவர் தன்னுடைய ஜோடிக்காக தலைகீழாக நடந்து வந்த காட்சி பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது.
ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாகச் சென்றுக் கொண்டிருக்கும் ஷோ தான் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4.
இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த வகையில், இந்த வாரம் ஆஹா கல்யாணம் சீரியலில் நடிக்கும் கதாநாயகர்களுக்கு திருமணம் இடம்பெற்றுள்ளது.
இந்த திருமணம் முதலில் டிஜே பிளாக்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது போல் காட்டப்பட்டது.
தலைகீழாக நடந்து வந்த பிரபலம்
இதனை தொடர்ந்து சீரியல் ஜோடிகளுக்கு கோலாகலமாக திருமணம் இடம்பெற்றுள்ளது.
அப்போது தொகுப்பாளர், பொண்ணு வேண்டும் என்றால் தலைகீழாக நடந்து வர வேண்டும் எனக் கூறிய போது, குறித்த நடிகர் தலைகீழாக நடந்து வந்து நடிகையை தூக்கியுள்ளார்.
இந்த காட்சியை பார்த்து அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
மேலும் பிரியங்கா வாயை பிளந்தபடி, குறித்த ஜோடியை ஆரவாரப்படுத்தியுள்ளார்.