கணவர் இல்லாத ஒரு மாதம்... கண்ணீரோடு உருக்கமான பதிவை பகிர்ந்த ஸ்ருதி சண்முகப்பிரியா
சீரியல் நடிகையான ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் உயிரிழந்து ஒரு மாதம் ஆன நாளில் உருக்கமான பதிவொன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சீரியல் நடிகை ஸ்ருதி
பிரபல தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த நாதஸ்வரம், மெட்டி ஒலி போன்ற சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.
சீரியல்களில் சில காலம் காணாமல் போயிருந்த இவர், பாரதி கண்ணம்மா பாகம் ஒன்றில் நடித்திருந்தார். அதன்பின் இவருக்கு மிஸ்டர் தமிழ்நாடு 2022 பட்டம் வென்ற அரவிந்த சேகர் என்பவருடன் வீட்டார் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற்றிருந்து.
திருமணம் முடித்து முதல் வருடத்திலேயே அவரது கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.
கணவர் இறந்து ஒரு மாதம்
இந்நிலையில், ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் உயிரிழந்து ஒரு மாதம் ஆன நாளில் கணவனின் நினைவு குறித்து உருக்கமான பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், "ஒரு உருவமாக இந்த ஒரு மாத காலமாக நீங்கள் இல்லாமல் நான் உடைந்து நொறுங்கி வழியில் மூழ்கும் போதெல்லாம் உங்களுடைய ஆன்மா என் மீது அன்பையும் வலிமையையும் பொழிகிறது. என்னைச் சுற்றி நீங்கள் இருப்பதை நான் எப்படி உணர்கிறேன் என்பதை யாரிடத்திலும் விளக்க முடியாது.
நாம் இருவரும் ஆத்மார்தமான நண்பர்கள் என்பதால் நம்மால் மட்டுமே அதை உணர முடியும். நீங்கள் என்றுமே என்னுடைய பாதுகாவலராக என்னுடைய ஏஞ்சலாக இருப்பீர்கள் என்பதை நான் மனமார நம்புகிறேன்.
எனது இறுதி மூச்சு உள்ள வரையில் நான் உங்களின் அழகான நினைவுகளை காதலோடு சுமந்து கொண்டு இருப்பேன். லவ் யூ அரவிந்த்!" என உருக்கமான ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார்.
மேலும், இந்த நேரத்திலும் தனக்கு ஆறுதலாகவும் துணையாகவும் இருப்பவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |