தனது மார்பகங்களைப் பற்றி பேசியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த நீலிமா
நீலிமா ராணி அனைவருக்கும் நல்ல பரீட்சயமானவர். கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர்.
தம்,திமிரு, பிரியசகி, நான் மகான் அல்ல உள்ளிட்ட திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் 1998ஆம் ஆண்டு ஒரு பெண்ணின் கதை என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்குள் கால் வைத்தார். தொடர்ந்து கோலங்கள்,மெட்டி ஒலி, கஸ்தூரி, அத்திப்பூக்கள், வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இவர் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், “2008 தொடக்கம் 2023 வரையில் எனது எல்லா வேலைகளும் திருமணத்தின் பின்னர்தான் நடைபெற்றது. நான் வெளியில் செல்கையில் என்னைப் பார்ப்பவர்கள் என்னுடன் பேச நினைப்பார்கள். பாராட்டவும் செய்வார்கள் அதேநேரம் திட்டவும் செய்வார்கள்.
மற்றவர்கள் என்னைத் தவறாகப் பேசுவதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அதேசமயம் எனது இரண்டாவது குழந்தை பிறந்ததும் நான் கொஞ்சம் குண்டாகிவிட்டேன். அதனால் சிலர் எனது மார்பகங்கள் பற்றியெல்லாம் கருத்து தெரிவிக்கிறார்கள்.
நான் எனது குழந்தைக்கு பால் ஊட்டுகின்றேன். அதனால்தான் அப்படி இருக்கிறது என்று சொல்லத் தோன்றும். ஆனால், சொல்லி என்ன பிரயோசனம் என்று நினைத்து விட்டுவிடுவேன்” என்று தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.