பிரிந்தது உடல் மட்டும் தான்... ஆன்மா என்னோடு தான்: கணவரை இழந்தப்பின் உருக்கமான பதிவை வெளியிட்ட ஸ்ருதி
சீரியல் நடிகையான ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் உயிரிழந்ததையடுத்து அவர் வெளியிட்ட பதிவு தற்போது அனைவரும் வேதனையடைய வைத்திருக்கிறது.
சீரியல் நடிகை ஸ்ருதி
பிரபல தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த நாதஸ்வரம், மெட்டி ஒலி போன்ற சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.
சீரியல்களில் சில காலம் காணாமல் போயிருந்த இவர், பாரதி கண்ணம்மா பாகம் ஒன்றில் நடித்திருந்தார்.
அதன்பின் இவருக்கு மிஸ்டர் தமிழ்நாடு 2022 பட்டம் வென்ற அரவிந்த சேகர் என்பவருடன் வீட்டார் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற்றிருந்து.
இந்நிலையில், திருமணம் முடித்து முதல் வருடத்திலேயே அவரது கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.
இதனால் மிகவும் உடைந்துப்போன ஸ்ருதி தற்போது ஒரு பதிவில் தனது வேதனையை பதிவிட்டிருக்கிறார்.
உருக்கமான பதிவில்
கணவரின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத ஸ்ருதி அந்த பதிவில்,
“உன் உடல் மட்டும் தான் பிரிந்துள்ளது. ஆனால் உன் ஆன்மாவும், மனமும் என்னைச் சூழ்ந்து இப்போதும் மட்டுமல்லாமல் என்றென்றும் என்னை பாதுகாக்கும். உங்கள் மீதான என் அன்பு இப்போது மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. நாங்கள் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நிறைய நினைவுகளை வைத்திருந்தோம். அதை நான் வாழ்நாள் முழுவதும் மதிக்கிறேன். உன்னை மிஸ் பண்றேன். மேலும் உன்னை நேசிக்கிறேன் அரவிந்த்! என் அருகில் உன் இருப்பை உணர்கிறேன்”
என தன் வேதனையை இந்த பதிவில் பகிர்ந்திருக்கிறார் இவருக்கு இணையத்தளவாசிகள் பலரும் ஆறுதலான கமெண்டுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |