நடிகையின் உயிரை பறித்த உயிர்கொல்லி…. இந்த ஆபத்தான அறிகுறி இருந்தால் எச்சரிக்கை! யாரையெல்லாம் அதிகம் தாக்கும்?
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மெட்டி ஒலி சீரியல் நடிகை உமா மகேஸ்வரி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்ட பின்னர் உயிரிழந்திருந்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்திருந்தது.
உண்மையில் இந்த மஞ்சள் காமாலை நோய் ஏன் ஒருவரை தாக்குகின்றது. இந்த உயிர் கொல்லி நோய்க்கு முக்கிய காரணியாக அமைவது என்ன?
அதிலிருந்து எம்மை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறி, பித்தப்பைக்குச் சென்று சேர்ந்து, பித்தக்குழாய் வழியாகக் குடலுக்குச் சென்றுவிட வேண்டும். அப்படிச் செல்லாமல் கல்லீரலிலேயே தேங்கிவிட்டால் மஞ்சள் காமாலை உண்டாகும்.
பித்தப்பைக் கல், பித்தப்பைப் புற்றுநோய், பித்தக்குழாய் புற்றுநோய், கணையப் புற்றுநோய், குடலின் முதற்பகுதியான டியோடினம் பகுதியில் புற்றுநோய் போன்ற பாதிப்புகளால் பித்தம் வெளியேறாமல் தேங்கிவிடும். அப்படிப் பாதிக்கப்படும் போதும் மஞ்சள் காமாலை உண்டாகும்.
கல்லீரலில் இருக்கிற செல்கள் செயல்படாததால் வரக்கூடிய மஞ்சள் காமாலையை ஹெப்பட்டோ செல்லுலர் ஜான்டிஸ் என்று சொல்வார்கள். இதை 'மெடிக்கல் ஜான்டிஸ்' என்றும் அழைக்கலாம்.
இது வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 'ஹெப்படைட்டிஸ்' வைரஸ் கிருமிகளின் பாதிப்பு, மது அருந்துதல் போன்ற காரணங்களால் வரலாம்.
எல்லா நோய்களுக்கும் உணவே மருந்து என்பது போல எல்லா ஆபத்துகளுக்கும் உணவே ஆபத்தாகவும் இருக்கின்றது.
இன்றைய நாகரீக உணவாக மது பாவனை பார்க்கப்படுகின்றது. பின்னாலில் இதுவே பல உயிர்களை பறிக்கின்றது. மஞ்சள் காமாலையில் எம்மை பாதுகாத்து கொள்ள நாம் உண்ணும் உணவுகளே அதிக பங்கு வகிக்கின்றன.
பொதுவாக மஞ்சள் காமாலை வரும்போது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் உணவுகள் மற்றும் பானங்களையே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஏனெனில் மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு செரிமான சக்தி குறைவாக உள்ளது. எனவே மஞ்சள் காமாலை உள்ளவர்களுகு செரிமானத்தை எளிதாக்குவதற்கும் மேலும் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திலிருந்து நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் ஏராளமாக தண்ணீரை குடிக்க மருத்துவர்களினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் மஞ்சள் காமாலையின் போது உதவும் சில உணவுகளை இப்போது பார்ப்போம்.
மூலிகை தேநீர்
மூலிகை தேநீரில் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இது உடலில் உள்ள நச்சுக்களை அழிக்க உதவி செய்து செரிமான சக்தியை அதிகமாக்குகிறது.
தானியங்கள்
மஞ்சள் காமாலை இருந்தால் முழு கோதுமை, தினை வகைகள், ஓட்ஸ், அரிசி போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது மஞ்சள் காமாலை சரியாவதை விரைவாக்கும்.
பாதாம் மற்றும் பருப்பு வகைகள்
பாதாம், முந்திரி மற்றும் பருப்பு வகைகளில் அதிகபட்ச ஆக்ஸிஜனேற்றிகளாக உள்ளன. இவை நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ளன. இவை கல்லீரலை ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு கல்லீரலின் செயல்ப்பாட்டையும் மேம்ப்படுத்துகிறது.
பால் நெருஞ்சில்
பால் நெருஞ்சில் செடியில் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இதில் ஹைபடோபிரோடெக்டிவ் உள்ளது. மேலும் இது புற்றுநோய்க்கு எதிராகவும் அழற்சிக்கு எதிராகவும் செயல்ப்படுகிறது.
இதனால் இது கல்லீரலுக்கு பயன் தரும் உணவாக உள்ளது. பால் நெருஞ்சில் இலையை பயன்படுத்தி தேநீர் தயாரித்து கூட அருந்தலாம்.
காபி
காபியானது புற்றுநோய் மற்றும் கல்லீரல் அபாயத்தில் இருந்து பாதுக்காப்பு அளிக்கின்றது. இதனால் டீ க்கு பதிலாக காபி அருந்தலாம்.
மஞ்சள் காமாலை நோயின் முக்கிய அறிகுறிகள்
- வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறுவீக்கம், காய்ச்சல், ரத்தக்கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும்.
- கண்ணின் வெள்ளைப் படலத்திலும், நாக்கின் அடிப் பகுதியிலும் மஞ்சளாக இருக்கும்.
- சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் போகும்.
- மேலும் சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமங்கள் ஏற்படும்.
- கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி பெரிதாகும்.
- இத்துடன் நிணநீர்க்கட்டிகளிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
- காரமான மசாலா உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
- மஞ்சள் காமாலை வந்து ஐந்து மாதங்கள் வரை அசைவ உணவுகள் எடுக்கக் கூடாது.
- முட்டையில் மஞ்சள் கரு, அதிக புரதம் உள்ள பருப்பு, சோயா வகைகள் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- சுகாதாரமற்ற இடங்களில் விற்கும் குளிர்பானம், உணவு வகைகளை உண்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
- எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் சாப்பிடுவது மிக முக்கியம்.
சிலர் எந்த நோயாக இருந்தாலும் உடனே கைவைத்தியத்தை மட்டுமே நாடுவார்கள். ஒரு சில நோய்களுக்கு நாட்டு மருத்துவம் கைகொடுக்கலாம். தற்போது அதிலும் கலப்படம் வந்து விட்டது.
மஞ்சள் காமாலை போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டு மருந்து மட்டும் தீர்வு கிடையாது.
நிறைய பேர் காரணத்தைக் கண்டறியாமலேயே மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து எடுத்து, நிலைமை மோசமடைந்து கல்லீரல் செயலிழக்கும் கட்டத்தில் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
நாட்டு மருந்துகளில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் மற்றும் உலோகங்கள் மஞ்சள் காமாலை மேலும் தீவிரப்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால் கல்லீரலையே செயலிழக்க வைக்கும் அளவுக்கு பிரச்னையை ஏற்படுத்திவிடும். எனவே உடனே எந்த நோயாக இருந்தாலும் மருத்துவ ஆலோசனையை பெற்று நடப்பதே சிறந்த வழியாகும்.