viral video:வானில் இருந்து மழையாக விழுந்த ஆயிரங்கணக்கான சிலந்திகள்... என்ன காரணம்?
பிரேசில் நாட்டில் Sao Thome das Letras என்ற பகுதியில் பெருமளவான சிலந்திகள் மழை போல விழும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த விடயம் அந்நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியதுடன், நிபுணர்கள் சிலருக்கு அதன் மர்ம என்ன என்பதை அறியும் ஆர்வத்தையும் தூண்டியது.
சில சமயங்களில் வானில் இருந்து பறவை மழை, மீன் மழை பெய்தது என்று அடிக்கடி நாம் கேட்டிருப்போம். இது போன்ற வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பார்க்கக்கூடியதாக இருக்கும்.
இந்நிலையில் பிரேசில் நாட்டில் சிலந்தி மழை என்ற காணொளியொன்று தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரேசிலில் உள்ள ஒரு கிராமத்தில் முதியவரின் விவசாய நிலத்திற்கு மேலே சிறிய சிறிய கரும்புள்ளிகள் போல ஏதோ தெரிந்ததுள்ளது. என்ன அது என்று உற்று நோக்கியபோது தான் அப்பகுதியில் இருந்த பலருக்கும் இந்த அதிர்ச்சி காத்திருந்திருக்கின்றது.
காணொளியை சமூக ஊடகத்தில் பதிவிட்ட நபர், “பிரேசிலில் சிலந்திகள் வானம் வரை வியாபித்துள்ளது.
இந்தப் பேரழிவு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் மார்ச் வரை கிராமப்புறங்களில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை காணப்படும் பட்சத்தில் நிகழ்கின்றது.
சுமார் 500 வரையிலான சிலந்திகளைக் கொண்ட பெரிய கூட்டம் வானம் முழுவதும் வலைகளைப் பின்னியிருக்கின்ற போதிலும் ஆனால் மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
😳 Spiders have taken over the sky in Brazil. This apocalypse happens every year from December to March in hot and humid weather in rural areas.
— Gennady Simanovsky (@GennadySimanovs) February 1, 2025
Huge groups of up to 500 spiders weave webs that stretch across the entire sky.
No danger to humans. pic.twitter.com/xAjEtUgnnR
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |