நம்பியவருக்கு காவலன்! எதிர்ப்பவர்களுக்கு எமன்... டாஃப் கொடுக்கும் கருப்பனின் இரகசியங்கள்
பொதுவாக தமிழர்களின் காவல் தெய்வங்களில் முக்கிய இடத்தில் கருப்பசாமி பெறுகிறார்.
இதனை தொடர்ந்து பெரும்பான்மையான கிராமப்புறங்களில் கருப்பசாமி இல்லாத கோவில்களே இல்லை எனலாம்.
அந்தளவுக்கு மக்களின் மனதிலும், வாழ்விலும் பாதுகாப்பிலும் கருப்பசாமி முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.
இவர் திருமணமாகாத தெய்வம் என்பதால் கட்டுபாடுகள் அதிகமாக இருக்கும். இவருக்கு நேர்த்தி வைத்து சில விடங்கள் செய்வதால் அந்த விடயம் கட்டாயம் நிறைவேறும் என்பது முன்னோர்களின் ஐதீகம்.
இதனால் பக்தர்கள் இவருக்கென மாலை அணிந்து தங்களின் வேண்டுதல்களை 48 நாட்களை உபவாசம் இருந்து வேண்டுவார்கள்.
இந்த வேண்டுதலின் இறுதியில் சபரிமலைக்குச் சென்று வேண்டுதல்களை நிவர்த்தி செய்வார்கள். இவ்வளவு சிறப்பம்சம் பொருந்திய கருப்பசாமியை ஒவ்வொரு கிராமத்திற்குகேற்ப வேறுவேறு பெயர்களில் அழைப்பார்கள்.
இந்நிலையில் கருப்பசாமியை சங்கிலி கருப்பன், கருப்பனார் சாமி, குல கருப்பனார், பதினெட்டாம்படியான், வேட்டைக் கருப்பு, சின்ன கருப்புசாமி, பெரிய கருப்புசாமி, மீனமலை கருப்புசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என பலவிதமான பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
அந்த வகையில் காவல் தெய்வமான போற்றப்படும் கருப்பசாமியை பற்றி இன்னும் மேலதிகமாக கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.