பாம்புகளை வரதட்சணையாக கொடுக்கும் விநோத பழக்கம்: இதெல்லாம் நடப்பது எங்கு தெரியுமா?
திருமணம் என்றாலே சிலருக்கு ஞாபகம் வருவது வரதட்சணை தான். வரதட்சணையால் எத்தனையோ பெண்கள் உயிரிழந்த சம்பங்களையும் நாம் கேட்டிருப்போம், பார்த்திருப்போம்.
அந்தவகையில் வரதட்சணையை காரணம் காட்டி திருமணத்தை நிறுத்தியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் வரதட்சணை என்றால் பொன், பொருள் கொடுப்பது தான் வழக்கம் ஆனால் மாறாக இங்கு பாம்புகளை கொடுத்து திருமணம் செய்யும் விநோத பழக்கம் ஒன்று இருக்கின்றது.
பாம்புதான் வரதட்சனை
இந்தியாவில் சத்தீஸ்கர் எனும் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சன் பாரா என்ற பழங்குடியினர் வரதட்சணையாக விதவிதமான பாம்புகளை பொடுக்கும் வினோத வழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள்.
பொன், பொருள் எல்லாம் வேண்டாம் பாம்புகள் மட்டும்தான் வேண்டுமாம். ஏனெனில் பாம்பை வரதட்சணையாக கொடுக்காவிட்டால் அந்த சமூகத்தில்அவர்களுக்கு மதிப்பு இருக்காது என்றும் அந்த திருமணம் முழுமை பெறாது என்றும் ஒரு நம்பிக்கை இருக்கிறதாம்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், முன்பென்பெல்லாம் 60 பாம்புகள் கொடுத்து தான் திருமணம் செய்வதாகவும் தற்போது 21 பாம்புகள் கொடுத்து திருமணம் செய்வதை கவலையுடன் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு கொடுக்கும் பாம்புகளில் பல வகையான பாம்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு பாம்புகளை வரதட்சணையாக கொடுக்கும் இவர்களின் வழக்கம் தற்போது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |