வளைந்து நெலிந்து மசாஜ் கொடுக்கும் பாம்புகள்! ஸ்பாவில் மட்டமல்லாக்க படுத்து கிடக்கும் நபர்
பாம்பு மசாஜ் செய்யும் காணொளி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
பொதுவாக ஓய்வுக்காக உடல் சோர்வைப் போக்க மக்கள் மசாஜ் செய்கிறார்கள்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ஸ்பாவில் பாம்புகள் மனிதர்களுக்கு மசாஜ் செய்து விடுகின்றது.
ICYMI: Not for the faint-hearted: A Cairo spa has introduced a massage using live snakes, known for relieving muscle pain and soothing joints pic.twitter.com/5mOrobrpk2
— Reuters (@Reuters) January 2, 2021
இது பாம்பு மசாஜ் என்று அழைக்கப்படுகிறது. பாம்பு மசாஜ் செய்யப்படும்போது, ஒரு நபரின் உடலில் டஜன் கணக்கான பாம்புகள் விடப்படுகின்றன.
அந்த நபரின் உடலில் பாம்புகள் ஊர்ந்து மசாஜ் செய்கின்றன. இங்கு பாம்புகளைக் கண்டு மக்கள் முதலில் அச்சப்பட்டாலும், பின்னர் அவர்கள் பழகிக்கொள்கிறார்கள். இந்த பாம்புகள் உடம்பில் ஊர்ந்து செல்லும்போது உடலுக்கு ஓய்வு கிடைக்கும்.