வரதட்சணையாக மாமியாரிடம் அதை கேட்ட மணமகன்.. ஆடிப்போன குடும்பத்தினர்கள்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
மேலும், ஊரடங்கு காரணமாக திருமணம் போன்ற சம்பிரதாயங்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, மிகவும் நெருக்கமான குறைந்த உறவினர்களை மட்டும் கொண்டு எளிய முறையில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து, உத்திரபிரதேசத்தில், வித்தியாசமான முறையில் ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த திருமணத்தில், திருமண சடங்குகளை வெறும் 17 நிமிடங்களில் நடத்தி முடித்துள்ளனர் ஒரு குடும்பத்தினர்.
மேலும், மணமகன் நூதன வரதட்சனை கேட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரிய பட வைத்துள்ளது. மணமகன் திவாரி மணமகள் ப்ரீத்தி இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் 7 முறை கோவிலை சுற்றி வந்து 17 நிமிடங்களில் திருமணம் முடித்துள்ளனர்.
மேலும், கொடிய வரதட்சனை எதுவும் வாங்காமல், ராமாயண புத்தகத்தை மட்டும் வரதட்சணையாக கேட்டு மணமகன் வாங்கியுள்ளார். இது மாமியாருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இளம்ஜோடிகள் பேசிய பொழுது செலவுகளை தவிர்த்து வரதட்சனை வாங்காமல் எளிமையான முறையில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று அனைவரிடமும் கேட்டுக்கொண்டனர்.
இந்த திருமணம் குறித்த தகவல் தற்போது அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.