viral video: பாம்பை அசால்ட்டாக தூக்கி மூக்கில் கடி வாங்கிய பெண்! இறுதியில் என்ன நடந்தது?
பாம்பை பிடித்து கொண்டு போஸ் கொடுத்த பெண் உற்சாகமிகுதியில் பாம்பை செங்குத்தாக மேலே தூக்கிய போது திடீரென பாம்பு அவரின் மூக்கை கடித்த பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தற்காலத்தில் உலகில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அதனை நொடி பொழுதில் அசுர வேகத்தில் சமூக வலைத்தளங்கள் உலகறிய செய்துவிடுகின்றது.
அந்த வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த ஷ்கோடலேரா என்ற இளம் பெண் ஒரு பாம்புடன் விளையாடுவதை வீடியோ எடுத்துள்ளார்.
அப்போது பாம்பு திடீரென எதிர்பாராத விதமாக அவரது மூக்கைக் கடித்தால், வலியால் துடித்த ஷ்கோடலேரா, பாம்பை தரையில் போட்டுவிட்டு ஓடுகின்றார்.
குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதுடன் இணையத்தளவாசிகள் பலரும் ஷ்கோடலேராவின் இந்த செயலை விமர்சித்துவருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |