சின்ன வெங்காயம் சாப்பிட்டால் மூலநோய் குணமாகுமா? முழுசா தெரிஞ்சுக்கோங்க
மரக்கறி வகைகளில் ஒன்று தான் சின்ன வெங்காயம் இது பார்ப்பதற்கு சின்னதாக இருந்தாலும் இதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம்.
சின்ன வெங்காயத்தில் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைடிரேட். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்தும், வைட்டமின் "B", வைட்டமின் "C" கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றது.
பொதுவாக பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் தான் அதிகமாக காரத்தன்மை காணப்படும். சின்ன வெங்காயத்தை சாப்பிடுவதால் உடலில் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சின்ன வெங்காயம்
நாம் வெங்காயம் வெட்டும் போது அதில் வரக்கூடிய காரத்தன்மைக்கு காரணம் அதிலுள்ள "அலைல் புரோப்பைல் டை சல்பைடு" என்ற பதார்த்தம் தான்.
இந்த பதார்த்தம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற உதவுகிறது. சளி இருமல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த வெங்காயச்சாறுடன் கொஞ்சமாக தேன் கலந்து சாப்பிட்டால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மற்றும் நுரையீரலில் உள்ள அழுக்குகளை போக்குவதில் சின்ன வெங்காயம் சிறப்பு பெற்றது என்றால் அது மிகையாகாது. ரத்த சோகை இருப்பவர்கள் சின்ன வெங்காயத்தை தினமும் பச்சையாக சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து அதிகரிக்கும்.
இதில் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. வைட்டமின் இ அதிகமாக தேவைப்படுபவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிட்டு வந்தால் இந்த சத்து அதிகரிக்கும்.
பல் சொத்தையால் அவஸ்த்தை படுபவர்கள் அந்த இடத்தில் சின்ன வெங்காயம் ஒரு துண்டு நறுக்கி வைத்தால் பல்லில் உள்ள புளுக்கள் வெளியேறும். வலிக்கும் நிவாரணம் கிடைக்கும்.
மூலநோய் பிரச்சனை இருப்பவர்கள் 50 கிராம் வெங்காயச்சாறில் சிறுது தண்ணீர் சேர்த்து 15 நாட்களுக்கு குடித்து வந்தால் மூலநோய் பிரச்சனைக்கு முடிவு கட்டலாம்.
இதில் இன்சுலின் சத்து அதிகம் காணப்படுவதால் இதை சக்கரை நோயாளிகள் சாப்பிட்டு வர வேண்டும். இதனால் சக்கரை நோய் கட்டுக்குள் வந்துவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |