சாப்பிட்ட உடனே இதை செய்திடாதீங்க... உடம்பிற்கு கேடு விளைவிக்கும்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு என்பது முக்கியமான ஒன்றாக இருக்கும் நிலையில், உணவு சாப்பிட்ட பின்பு சில தவறுகளை நாம் செய்யக்கூடாது.
ஆரோக்கியம் உணவுடன் பிரிக்க முடியாத ஒன்றாகும். எனவே, உணவு சரியாக ஜீரணிக்க சில விதிகளை பின்பற்ற வேண்டும்.
உணவு சாப்பிட்ட பின்பு செய்யக்கூடாத தவறுகள்
சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
தண்ணீர் குடித்தால் செரிமான அமைப்பின் செயல்பாடு பாதிக்கப்படுவதுடன், உணவும் ஜீரணமாகாமலும், சாப்பிட்ட உணவின் சத்துக்களும் கிடைக்காமல் இருக்கும்.
பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், இரவு உணவுக்கு பின்பு சாப்பிடுவது கூடாது. இவை செரிமான கோளாறு, வயிறு வலி, வீக்கம் பிரச்சினையை ஏற்படுத்தும்.
சாப்பிட்ட உடன் இனிப்பு சாப்பிடக் கூடாது. ஏனெனில் உடல் பருமன் அதிகரித்து பல நோய்கள் தாக்கவும் செய்யுமாம். சாப்பிட்ட பின்பு கடுமையான உடற்பயிற்சி, யோகா செய்வதை தவிர்க்க வேண்டும்.
இவை நன்மையை ஏற்படுத்தாமல் தீமையை தான் விளைவிக்கும். இதே போன்று சாப்பிட்ட பின்பு டீ காபி குடிப்பதை தவிர்க்கவும்.
இவை அசிடிட்டி பிரச்சினை ஏற்படுத்தும் என்பதால் இரவில் குடிக்க வேண்டாம். சாப்பிட்ட உடனே தூங்குவது நல்லது அல்ல.
அதே போன்று ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது செரிமான பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றது.
ஆனால் சாப்பிட்ட பின்பு 10 முதல் 15 நிமிடங்கள் நடப்பது நல்லதாகும். இவை செரிமானம் ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |