நீங்கள் எவ்வளவு காலம் வாழ்வீர்கள் என்று உங்கள் நகமே சொல்லும்... எப்படி தெரியுமா?
நீங்கள் நகங்களை வெட்டும் போது அந்த தேதியை நினைவு வைத்து கொண்டு அடுத்த தடவை கவனித்து செயற்படுங்கள்.
கைகளின் நகம்
ஒரு மனிதனின் ஆயுட் காலம் எவ்வளவு இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. நாம் எப்போது இறப்போம் எப்போது என்ன நடக்கும் என தெரியாமலே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால் ஒரு நபரின் ஆயுள் காலத்தை அவரின் உடலில் உள்ள நகங்களை வைத்தே கண்டுபிடிக்க முடியுமாம்.
நமது உடலின் உள் ஆரோக்கியம் பெரும்பாலும் வெளிப்புற உறுப்புகளில் பிரதிபலிக்கும் எனப்படுகின்றது. எனவே தான் தோல், முடி மற்றும் கண்கள் மட்டுமன்றி, நம் நகங்களும் நம் உடலின் ஆரோக்கியத்தை கண்ணாடி போல சொல்லும் எனப்படுகின்றது.

பொதுவாக நமது நகங்களின் ஆரோக்கியமும் அதன் வளர்ச்சி விகிதமும் நமது உள்உறுப்புக்கள் முதல் நமது உடல் ஆராக்கியம் வரை அப்படியே கூறும் என்ற கருத்து உள்ளது.
இந்நிலையில்தான் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற மரபியல் நிபுணரும், வயதானது குறித்து பல்வேறு ஆராய்ச்சி செய்து வருபவருமான டாக்டர் டேவிட் சின்க்ளேர், இந்த விஷயத்தை இன்னும் தெளிவாக கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும் போது “உங்கள் நகங்கள் விரைவாக வளர்ந்து அடிக்கடி வெட்டப்பட வேண்டியிருந்தால், உங்கள் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் மெதுவாக வயதான நிலைக்குச் செல்கின்றன என்று அர்த்தம்” என்று அவர் கூறி உள்ளார்.

அதாவது இதன் பொருள் நகம் வேகமாக வளர்ந்தால், நம் உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாக உள்ளன என பொருளாம். இது கர்ப்பனையில் அல்லது யூகத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் இல்லை.
1979 ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் நூற்றுக்கணக்கான மக்களிடம் பல ஆண்டுகளாக நகங்களின் வளர்ச்சியை வைத்து ஆய்வு செய்து வந்துளளனர்.
இந்த ஆய்வின்படி 30 வயதிற்குப் பின்னர், நக வளர்ச்சி விகிதம் வாரத்திற்கு சராசரியாக 0.5 சதவீதம் குறைகிறது என்று ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.
இதன் பொருள் நாம் வயதாகும்போது நகங்கள் இயற்கையாகவே மெதுவாக வளரும். அதாவது உடலின் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக வயதாகும்போது குறையும்.
இந்த கருத்தை நாம், ‘நகம் வேகமாக வளர்ந்தால், உடலின் ஆரோக்கியம் மேம்பட்டு இருக்கும்’ என்றும் சொல்லலாம். நகங்கள் பொதுவாக 30 வயது வரை வேகமாக வளரும்.

30 வயதுக்குப் பிறகு நகங்களின் வளர்ச்சி இயல்பாகவே குறையும். ஆனால் அந்த வயதிற்குப் பின்னரும் நகங்கள் வேகமாக வளர்ந்து அடிக்கடி வெட்ட வேண்டியிருந்தால், இதயம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், தோல் போன்ற முக்கிய உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்படுகின்றன என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என டாக்டர் டேவிட் சின்க்ளேர் கூறுகிறார்.
நக வெட்டும் இடைவெளி குறைவது நீண்ட ஆயுளின் நல்ல முன்னறிவிப்பாக கருதப்படுகிறது. வயதுடன் ரத்த ஓட்டம் குறைவதால் நக வளர்ச்சியும் குறையும்.
ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் மாற்றங்கள், உணவுப் பழக்கம் ஆகியவை நகங்களை பாதிக்கும். நகங்களில் கீறல்கள், தழும்புகள் இருந்தால் சில ஊட்டச்சத்து குறைபாடுகளின் அறிகுறியாக இருக்கலாம். எனவே தான் நகங“களை வைத்து நம் உடல் நிலை எப்படி உள்ளது மற்றும் நம் ஆயுள் காலம் எவ்வளவு என கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |