எல்லைமீறிய பேச்சு வார்த்தையால் சரமாரியாக சண்டையிடும் பெண் போட்டியாளர்! பப்ளிக் குழாயான பிக் பாஸ் வீடு..
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான அசீமை வாய்க்கு வந்தபடி தனலெட்சுமி திட்டிதீர்த்துள்ளார்.
சூடுபிடிக்கும் பிக் பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர். வாக்குகள் அடிப்படையில் சுமார் 10 க்கும் மேற்ப்பட்ட போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
தொடர்ந்து தற்போது இருக்கும் போட்டியாளர்களில் அசிம், விக்ரமன், சிவின் மற்றும் தனலெட்சுமி முக்கிய போட்டியாளராக பார்க்கப்படுகிறார்கள்.
டைட்டில் வின்னர்
இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்ற தொனிப்பொருளிள் மாறி மாறி தன்னுடைய பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் அசீமை, தனலெட்சுமி ஒரு பெரியவர் என்று கூட பார்க்காமல் வாய்க்கு வந்த வார்த்தைகளால் கடுமையாக பேசியுள்ளார்.
அசீம் ஆரம்பத்திலிருந்தே அசிங்கமாக பேசுபவர். ஆனால் இவர்கள் இருவரும் வீட்டில் சண்டையிட்டு கொள்வதை ஒரு வேளையாகவே வைத்துள்ளார்கள்.
இதனை பார்த்த சக போட்டியாளர்கள் இவர்களை சமாதானம் செய்யாமல் பப்ளிக் குழாய் சண்டையை வேடிக்கை பார்ப்பது போன்று ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது,