படர்தாமரையால் படாத பாடுபடுகிறீர்களா? 2நாளில் மறைந்துபோக இந்த பேஸ்ட் போதும்
பொதுவாகவே படர்தாமரை என்பது தோல் மற்றும் தொற்று நோய் ஆகும். இது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடியது.
படர்தாமரையை உடனடியாக சரிசெய்யாவிட்டால் பின் அது தொடர்ந்தும் உடலை சுற்றியும் சருமம் தடிப்பாகவும் அரிக்ககூடியதுமாக இருக்கும்.
படர்தாமரை
ஃபங்கஸ் என்று அழைக்கப்படும் இந்த பூஞ்சை தொற்று நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதாவது அதிக உஷ்ணம் மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள சருமங்களில் இந்த தோல் நோய் உண்டாகுகின்றது.
அதாவது உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளாதவர்களுக்கு, உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு, மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு, தண்ணீரில் அதிகம் புழங்குபவர்களுக்கு, உடலில் அதிகம் வியர்வை வருபவர்களுக்கு இந்த படர்தாமரை தொற்றிக்கொள்ளும்.
தீர்வு
இந்த படார்தாமரையை விரட்டியடிப்பதற்கு சிறந்த தீர்வொன்று உள்ளது. அதாவது, ஒரு கிளை வேப்பிலையை நன்றாக கழுவி உரலில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிகவும் கெட்டியாக இருக்கும் பட்சத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளலாம். பின்பு சிறிதளவு கற்றாழை ஜெல்லை எடுத்து அரைத்து வைத்துள்ள வேப்பிலை பேஸ்டுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு பச்சை கற்பூரத்தை எடுத்து நன்றாக இடித்து பவுடராக அதில் கால் ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்போது, படர்தாமரை அரிப்பு சொரியாசிஸ் உள்ள இடங்களில் இந்த வேப்பிலை பேஸ்ட்டை தடவ வேண்டும். இவ்வாறு செய்து வர படர்தாமரை சொரியாசிஸ் போன்றவை இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விடும்.