அழகைக் கெடுக்கும் படர் தாமரையினால் அவதியா? இதை மட்டும் செய்தாலே போதும்
படர்தாமரை என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான தோல் நோய் தொற்றாகும். டெர்மடொஃப்ட் என அழைக்கப்படும் ஒரு பூஞ்சை தொற்றினால், படர்தாமரை ஏற்படுகிறது.
இந்த படர்தாமரையானது உடல் மற்றும் உடைகள் சுத்தமாக இல்லாதவர்களுக்கு பூஞ்சைகளினால் தொற்றப்பட்டு ஏற்படக்கூடியது.
சாதரணமாக சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த படர்தாமரை அதிகமானால் உடம்பில் கடுமையான சொரியாசிஸ் போன்ற அரிப்பை ஏற்படுத்தும்.
படர்தாமரையை மருத்துவ ரீதியாக டினியா என அழைக்கப்படுக்கிறது, இது மனிதர்கள் மற்றும் விலங்குகளையும் பாதிக்கக்கூடியது.
படர் தாமரை ஏன் வருகின்றது?
ஃபங்கஸ் என்று அழைக்கப்படும் இந்த பூஞ்சை தொற்று நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றது.
அதிக உஷ்ணம் மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள சருமங்ளில் இந்த தோல் நோய் உண்டாகுகின்றது. அதாவது உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கு, உடல் எடை அதிகம் உள்ளவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், மக்கள் கூட்டம ்அதிகம் உள்ள இடங்களில் வசிப்பவர்கள், விளையாட்டு வீரர்கள், தண்ணீரில் அதிகமாக புழங்குபவர்கள், உடலில் அதிகமான வியர்வை வருபவர்கள் என்ற பல காரணங்களால் இந்நோய் ஏற்படுகின்றது.
இந்த அறிகுறிகளை மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க! நீரிழிவு நோயாக இருக்கலாம் ஜாக்கிரதை
படர்தாமரை குணமாக எண்ண செய்ய வேண்டும்?
பொதுவாக இந்த பூஞ்சைகள் மண்ணிலும், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடம் வசிக்கக்கூடியவை என்பதினால் நமது உடலை நாமே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் ஒரு முறைக்கு இரண்டு முறை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். குளித்த உடன் உடலை ஈரம் இல்லாதவாறு சுத்தமாக துடைக்க வேண்டும்.
ஈரம் இல்லாத நன்கு காய்ந்த ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். படர் தாமரை படரும் இடங்களான, அக்குள், பிறப்புறுப்பு, தொடை, தொடை இடுக்குகள், கால் நகங்கள், கழுத்து மடிப்பு, கால் இடுக்குகள், பெண் களின் மார்பகங்களின் கீழ் சதை மடிப்புகள் உள்ள இடங்கள் என்பவற்றை ஈரம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிகிச்சை என்ன?
இன்றைய நவீன மருத்து வத்தில் தேமலைப் போக்கப் பலதரப்பட்ட களிம்புகள், வியர்வையை உறிஞ்சும் மருந்து கலந்த பவுடர்கள், மாத்திரைகள், நடைமுறையில் உள்ளன.
தினமும் இரு வேளை குளித்து, தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்தக் களிம்பு / பவுடர்களில் ஒன்றைச் சில வாரங்களுக்குத் தொடர்ந்து பூசிவந்தால், தேமல் விடைபெற்றுக் கொள்ளும்.
மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தேமலுக்கான மாத்திரைகளையும் சாப்பிட்டுவர வேண்டும். அப்போதுதான் தேமல் மறுபடியும் வராது.
படர்தாமரையை போக்க சில வீட்டு வைத்தியங்கள்
குப்பைமேனி
குப்பைமேனியும் கீழாநெல்லியை போன்று சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது. குப்பைமேனியின் இலைகளை ஒரு பங்கு பாத்திரத்தில் எடுத்து அதில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் விடவும்.
பின் அதனை சிறுதீயில் வைத்து தைலப்பதத்தில் காய்ச்சி, ஆற வைத்து அந்த தைலத்தை படர்தாமரை உள்ள இடங்களில் பூசி வர படர்தாமரை சரியாகும்.
பெருசு ஐ லவ் யூ.... அதிரடியாக உள்ளே வந்த பிரியங்கா! களைகட்டும் பிக்பாஸ்
பூண்டு
மருத்துவம் குணம் அதிகமாக நிறைந்த பூண்டு படர்தாமரையை போக்குவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு அதில் பூண்டுகளை நசுக்கி போட வேண்டும்.
பின் அதனை தைலப்பதத்தில் காய்ச்சி வடிக்கட்டி எடுத்துக் கொண்டு படர்தாமரை இருக்கும் இடங்களில் இருவேளைகளில் பூசி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதனால் படர்தாமரை விரைவில் குணமாகும்.
தும்பை
தும்பை ஒரு அற்புதமான மருத்துவ மூலிகை. 2 ஸ்பூன் அளவு தும்பை இலை பசையை எடுத்து அதனுடன் 1 ஸ்பூன் திரிபலா சூரணம், 1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து படர்தாமரை உள்ள இடத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து குளித்துவர படர்தாமரை விலகிப்போகும்.
மிளகு
மிளகு பொதுவாக பல ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு சிறந்த மருத்துவ பொருளாக பயன்படுகின்றது. அந்த வகையில் இந்த படர்தாமரை பிரச்சினைக்கு மிளகு ஒரு சிறந்த தீர்வினை அளிக்கின்றது.
மிளகை நெய்யுடன் சேர்த்து நன்றாக அரைத்து, இரவு உறங்குவதற்கு முன்பு இந்த பேஸ்டினை படர்தாமரை அல்லது தோல் நோய் உள்ள இடங்களில் நன்றாக போடவும். பின்பு மறுநாள் காலையில் சீயக்காய் தூள் தேய்த்து கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்தால் நன்கு மாற்றம் ஏற்படும்.
கீழாநெல்லி
கீழாநெல்லியின் இலைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு, அதில் 2 பங்கு அளவு தேங்காய் எண்ணெயை சேர்த்து சிறிய தீயில் வைத்து காய்ச்சி, தைலபதத்தில் எடுத்து ஆற வைத்து பின் அதனை படர்தாமரை உள்ள இடங்களில் பூசி வந்தால், விரைவில் குணமடையும்.
குறிப்பு
இதுபோன்ற தோல் நோய் பிரச்சினைகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கான கைவைத்தியம் சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் போது இந்த பிரச்சினைகள் குணமாவது சாத்தியம்.
ஆனால் இவை தீவிரமாகும் போது வெறும் கைவைத்தியம் மட்டும் அல்லாது மருத்துவரையும் அணுக வேண்டும்.