பொலிவிழந்த முகத்தை வெள்ளையாக்கும் Face Pack- இரவில் போட்டால் போதும்- செய்து பாருங்க
பொதுவாக கோடைக்காலம் வந்து விட்டாலே வெயிலினால் வரும் சரும பாதிப்புக்கள் அதிகமாகி விடும். ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
சிலர் வெளியில் சென்று வீடு திரும்பும் பொழுது அவர்கள் இருந்த அடையாளம் தெரியாத அளவுக்கு சருமம் கருத்து போய்விடும். இப்படியான நிலையில் சருமத்திற்கு உரிய பராமரிப்பு அவசியம் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
சருமத்திற்கு ஏற்ப ஃபேஸ் பேக்குகள், ஃபேஸ் மாஸ்க்குகள், ஸ்கரப் போன்றவற்றை பயன்படுத்தினால் சருமம் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருக்கும். அழகு நிலையங்களில் இருக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட, வீட்டில் இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்தினால் சிறந்த பலனை பெறலாம்.
கெமிக்கல் கலந்த ஃபேஸ் பேக்குகளை போடுவதால் சரும பாதிப்புக்கள் அதிகமாக இருக்கும். அதே சமயம் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு பேக் செய்து போட்டால் முகம் பொலிவு இயற்கையானதாகவும் நிலையானதாகவும் இருக்கும்.
அந்த வகையில், கருப்பாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக்கும் Face Pack எப்படி தயாரிக்கலாம்? அதனை எந்த நேரத்தில் போடலாம்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ப்ளூபெர்ரி
- தயிர்
- தேன்
செய்முறை
மேற்குறிப்பிட்ட பொருட்களை ஒரு கிண்ணத்தில் போட்டு பசை போன்று கலந்து எடுத்து கொள்ளவும். இரவு தூங்கும் முன்னர் முகத்திற்கு போட்டு, நன்றாக காய வைத்து விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் உள்ள கருமை மறைந்து விடும்.
சிலரின் முகம் எப்போதும் எண்ணெய்த்தன்மையாகவே இருக்கும். அப்படியானவர்களும் பயன்படுத்தலாம் எண்ணெய்த்தன்மை குறையும்.
இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை திறம்பட அகற்றுவதோடு, சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தி, முகப்பரு வருவதையும் கட்டுக்குள் வைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |