வெண்ணெய் சாப்பிடுவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? அதிர்ச்சி தகவல்
வெண்ணெய்யை நாம் தினமும் பயன்படுத்தினால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெண்ணெய்
வெண்ணெய் என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு சுவையான பால் பொருள் ஆகும். தினமும் வெண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் அதிகமாக உள்ளது.
வெண்ணெய் கால்சியம் நிறைந்துள்ள நிலையில், பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கின்றது.
தற்போது மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் உடல் எடை அதிகரிப்பு என்பது சகஜமாகிவிட்டது.
இதனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் என பல நோய்களுக்கு ஆளாகின்றனர். உடல் பருமனால், பெரும்பாலானோர் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.
வெண்ணெய்யை நாம் தினமும் எடுத்துக் கொண்டால் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றது.
வெண்ணெய் ஆபத்தா?
கடந்த 33 ஆண்டுகளில் 2.21 லட்சம் பேரை ஆய்வு செய்ததில், தினமும் 10 கிராம் வெண்ணெய் உட்கொள்வதால் 7% இதய நோய்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
வெண்ணெயின் பயன்பாடு அதிகரித்திருப்பதற்கான முக்கியக் காரணங்களில், தற்போதைய சமையல் முறைகளில் வெண்ணெய் அதிகம் சேர்ப்பது மற்றும் மேற்கத்திய உணவு பழக்கவழக்கங்கள் அதிகரித்துள்ளன என்பதும் அடங்கும்.
நம்முடைய பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் வெண்ணெய் ஒருவகையாக ஆரோக்கியமானதாக இருக்கலாம்.
ஆனால், சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை வெண்ணெய்களில், சல்பர், விலங்கு கொழுப்பு மற்றும் மாக்ரைன் போன்ற ரசாயனக் கலவைகள் சேர்க்கப்பட்டுள்ளதால் உடம்பிற்கு தீங்கு விளைவிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |