குட்டி பொண்ணுடன் கதை பேசும் சினிமா நட்சத்திரம்! என்ன பேசினார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் குட்டி குழந்தையொன்றுடன் பேசி விளையாடும் காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சினிமாவில் சாதனைகள்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான "கலக்க போவது யாரு" என்ற நிகழ்ச்சியின் மூலம் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.
இவர் சினிமா மீதுக் கொண்டுள்ள தீவிர ஆசையாலும் நாட்டத்தினாலும் இன்று பாரிய வளர்ச்சிக் கண்டுள்ளார். இவர் ஒரு நடிகர் மட்டுமன்றி இவர் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸாகவும் பணியாற்றி வருகிறார்.
சுமாராக அவருடைய திரைப்படங்களிலே ரஜினிகாந்த், கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் என தமிழ் சினிமாவிலில் இருக்கும் ஸ்டார்களின் குரல்களில் பேசி அசத்தியிருப்பார்.
சிவாவை பொருத்தமட்டில் தன்னுடைய கல்லூரிக்கு தவணைப்பணம் கட்ட கூட காசு இல்லாமல் இருந்த ஒரு சூழ்நிலையில் வளர்ந்தவர் இவரின் நிகழ்ச்சிகள் மற்றும் படங்கள் என்பன சுவாரஸ்யமாக இருப்பதால் ரசிகர்கள் என ஒரு பட்டாளமே இருக்கிறது.
இவர் சமிபத்தில் நடித்த டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் 100 கோடியை பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது. இதனால் தமிழ் சினிமாவில் இவரும் டாப் நடிகர்கள் லீஸ்ட்டி சேர்ந்துள்ளார்.
குட்டி குழந்தையுடன் பேசி விளையாடும் சிவா
இந்த நிலையில் சிவாவிற்கு அதிகப்படியான குழந்தை ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் “மாவீரன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிவாவை பார்க்க அவருடைய குட்டி குழந்தை ரசிகை ஒருத்தி வருகை தந்துள்ளார்.
அப்போது பொறுமையாக குழந்தையின் பக்கத்தில் அமர்ந்து அவர் போட்டிருக்கும் சட்டை முதற்கொண்டு கழுத்தில் அணிந்திருக்கும் மாலை வரை கேள்விகளை கேட்டு வருகிறார்.
அதற்கு அந்த குழந்தையும் பதிலுக்கு பதில் பேசிக் கொண்டுருக்கிறது. குறித்த குழந்தைக்கு சுமார் மூன்று தடவைகள் மொட்டை போட்டுள்ளதாக கூறியிருக்கிறார்கள்.
இந்த வீடியோக்காட்சி இணையத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில்,“சிவாவிற்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் போலயே” என நெட்டிசன்கள் கமண்ட் செய்து வருகிறார்கள்.