தந்தையின் பிறந்தநாளில் உருக்கமான பதிவை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையின் 70ஆவது பிறந்த தினத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல் தன் சொத்த முயற்சியால் முன்னேறி வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவரும் ஒரு காலத்தில் விஜய் ரிவியின் வாரிசாகத் தான் இருந்தார்.
தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன்மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
முதன் முதலில் காமெடி நடிகராக படங்களில் நடிக்கத் தொடங்கிய கதாநாயகனாக அறிமுகமாகி அடுத்தடுத்து என பல வித்தியாசமான படங்களை நடித்து டாப் நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
தற்போது இவர் நடிப்பில் மாவீரன் திரைப்படம் தயாராகி வருகிறது.
தந்தையின் 70ஆவது பிறந்தநாள்
இந்நிலையில், நேற்று சிவகார்த்திகேயனின் தந்தையின் 70ஆவது பிறந்தநாளில் தனது வாட்ஸ் அப்பில் தந்தை குறித்து உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.
அதில், தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உங்கள் முன்னே! இன்று நான் என்ன செய்தாலும் அதற்கு எல்லாம் நீங்கள் தான் காரணம் எல்லாமே நீங்கள் கற்றத் தந்தது தான். நம் கையில் இருப்பதை கொண்டு மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று கற்றுக் கொண்டேன்.
நான் எப்போதும் உங்களுக்கு பெருமை சேர்க்கும் மகனானத் தான் இருப்பேன் என்றைக்கும் நீங்கள் நினைவு கூறப்படுவீர்கள் என்று பதிவிட்டிருந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |


