இலங்கையில் சிவாஜி கணேசன்: தந்தையின் நினைவுகளை சுவடுகளாக்கிய தருணம்!
நடிகர் திலகத்தின் மகனான ராம்குமார் இலங்கைக்கு விஜயம் செய்து அவரின் பல நினைவுகளை மீட்டி பல விடயங்களை பகிர்ந்திருக்கிறார்.
நடிகர் திலகம்
சிவாஜி கணேசன் தற்போது சினிமாவில் எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் யாரையும் அடித்துக் கொள்ள முடியாத அளவிற்கு திரைத்துறையில் பெரும் சாதனைப் படைத்தவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
இவரின் முதல் திரைப்படம் பராசக்தி தான். இந்த திரைப்படத்தில் தான் நடிகராக அறிமுகமாக பலரின் மனதை வென்றார். அதற்குப் பின்னர் பல வேடங்களில் நடித்து கதாப்பாத்திரமான வாழ்ந்து நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இவரின் நடிப்பு சினிமாவில் 50 ஆண்டுகள் ஆட்சி செய்து 280 படங்களுக்கு மேல் நடித்து தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்.
இவருடைய நடிப்புக்கு இன்னும் யாரும் நிகராக இருந்ததில்லை. இவருக்கு எல்லா நாடுகளிலும் இப்போதும் கூட ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும், நடிகர் திலகத்திற்கு ராம்குமார் மற்றும் பிரபு என இருமகன்மார் இருக்கிறார்கள்.
இலங்கையில் சிவாஜி கணேசனின் தடங்கள்
இந்நிலையில் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் இலங்கைக்கு 24ஆம் திகதி சென்றிருக்கிறார். இலங்கையில் சிவாஜிவைத்த மாமரத்தை பார்த்து உருகி நின்ற சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
மேலும், சிவாஜியின் நிதி சேகரிப்பில் உருவான மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையை பார்க்க சென்றிருக்கிறார்.
இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்னர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக சிவாஜி கணேசன் 1953ம் ஆண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி யாழ்ப்பாணம் நகரசபை மண்டபத்தில் "என் தங்கை" என்ற நாடகத்தை நடத்தி நிதிசேகரித்துக் கொடுத்திருந்தார்.
அந்த நேரத்தில் சிவாஜி ஒரு இளம் நடிகர். சிவாஜியின் முதல் படமான 'பராசக்தி ' 1952 ஒக்டோபரில் வெளியானது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து முனைவர் மருதுமோகன் எழுதிய புத்தகத்தின் யாழ்ப்பாண வெளியீட்டுக்காக இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத்தமிழரான முனைவர் சிவா பிள்ளையின் அழைப்பின்பேரில் 'சென்னை-யாழ்ப்பாணம்' பயணிகள் விமானத்தில் பலாலிக்குப் பறந்து வந்த ராம் குமார், யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டார்.
யாழ்ப்பாணத்தின் ஒரு சில பகுதிகளையும் சுற்றிப் பார்த்த ராம் குமார். நல்லூர் கந்தசாமி கோவிலுள் கண்கள் குளமாகி அழுதேவிட்டாராம்.
அத்துடன் தொல்புரம் மன்னதோட்டம் ஜெகஜோதி அம்பாள் ஆலயம், பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம், கீரிமலை, செல்வச்சந்நதி, மாவிட்டபுரம், வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபாட்டார்.