திடீரென்று வைரலாகும் சிவாஜி கணேசன்- யார் இந்த நபர் தெரியுமா?
சிவாஜி கணேசன் உருவ அமைப்பில் இருக்கும் ஒருவர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றார்.
இவரை பார்த்த பலரும் மறைந்த சிவாஜி கணேசன் அவரை உயிரோடு கண் முன் நிறுத்தியுள்ளதாக வீடியோக்களை வைரலாக்கி வருகின்றனர்.
யார் இந்த சிவாஜி கணேசன்?
இவரின் இயற்பெயர் கண்ணப்பன். எட்டு வயதில் மேடை ஏறியவர் .
64 ஆண்டு காலமாக இதில் இருக்கிறார். ஆரம்ப காலத்தில் நடன குழு உடன் இணைந்து சிவாஜி கணேசன் திரையில் தோன்றி நடித்த பாடல் காட்சிகளை அச்சு மாறாமல் பல மேடைகளை கலக்கி உள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது மானசீக குருவாக மனதில் நிறுத்தி அவரின் நடை உடை பாவனைகளை பிரதிபலிக்கும் படி ரசிகர்களின் முன்னிலையில் பல சுபநிகழ்ச்சிகள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெறும் கண்ணனாக இருந்த இவரை சிவாஜி கண்ணனாக ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
குறித்த நபர் சினிமாவில் தனது திறமையை காட்டாவிட்டாலும் பல மேடை நாடகங்களை முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
அவருக்கு தேசிய விருது, ஜாம்பவான் விருது, கிங்மேக்கர் விருது, சின்ன சிவாஜி விருது, அன்னை தெரேசா விருது, நடிகர் திலக சக்கரவர்த்தி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பெண் சிந்திய மக்கள் இயக்க புரட்சி விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.