நடிகர் திலகத்தின் இறுதி நிமிடம்...! இது தான் நடந்தது: பல ஆண்டுகள் கழித்து சோகத்தை பகிர்ந்த தாணு!
நடிகர் சிவாஜி கணேசன் இறப்பதற்கு முன் கடைசியாக நடந்த சம்பவம் பற்றி பல ஆண்டுகள் கழித்து மனம் திறந்து கூறியிருக்கிறார் இயக்குனர் தாணு.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
தற்போது சினிமாவில் எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் யாரையும் அடித்துக் கொள்ள முடியாத அளவிற்கு திரைத்துறையில் பெரும் சாதனைப் படைத்தவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
இவரின் முதல் திரைப்படம் பராசக்தி தான். இந்த திரைப்படத்தில் தான் நடிகராக அறிமுகமாக பலரின் மனதை வென்றார். அதற்குப் பின்னர் பல வேடங்களில் நடித்து கதாப்பாத்திரமான வாழ்ந்து நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இவரின் நடிப்பு சினிமாவில் 50 ஆண்டுகள் ஆட்சி செய்து 280 படங்களுக்கு மேல் நடித்து தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்.
இப்படி சினிமாவில் தனியாட்சி பிடித்த நடிகர் திலகம் 2001ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் திகதி உடல் நலக்குறைவால் 72 வயதில் உயிரிழந்தார்.
சோகத்தைப் பகிர்ந்த தயாரிப்பாளர்
சிவாஜி இறந்ததைப் பற்றி பல ஆண்டுகள் கழித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. இது தொடர்பில் அவர் தெரிவித்திருந்ததாவது,
சிவாஜி சாருக்கு என் மீது அதிக பாசம் உண்டு. என்னை வீட்டுக்கு அழைத்து விருந்தெல்லாம் வைத்திருக்கிறார். என்னுடன் அவருடைய குடும்ப விசயங்களை கூட பகிர்ந்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அவரின் பேத்தி திருமண வாழ்வு குறித்து மன உளைச்சளில் இருந்திருக்கிறார். அவள் அப்படி இருக்கும் போது நான் எப்படி மகிழ்ச்சியாக வாழ்வேன் என கூறி புலம்பிக் கொண்டே இருந்தார் இப்படி பேசி 15 நாட்களில் அவர் உயிரிழந்து விட்டார்.
அவர் இறக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு அங்குபோய் பார்த்தேன். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் என்ன செய்தும் அவரைக் காப்பற்றமுடியவில்லை.
அவரின் செயற்கை சுவாசத்தை கழட்ட டொக்டர் சொன்ன போது எல்லோரும் மருத்து விட்டார்கள். நான் தான் அதைக் கழட்டி கொஞ்ச நேரத்தில் உயிரிழந்து விட்டார். இந்த தகவலை சோகமாக பகிர்ந்து இருக்கிறார் தாணு.