கோடி கோடியாக பணம் இருந்தும் லதா மங்கேஷ்கர் திருமணம் செய்யாதது ஏன்? சிவாஜிக்காக காசு வேண்டாம்.... உண்மைகளை உடைத்த பிரபு!
மக்கள் திலகம் சிவாஜி கணேஷனுக்காக பணம் வாங்காமல் பாட்டு பாடிய லதா மங்கேஷ்கரை நடிகர் பிரபு நினைவு கூர்ந்துள்ளார்.
இந்தியாவின் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று அவர் காலமானார். இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
1987-ம் ஆண்டு பிரபு நடித்த ‘ஆனந்த்’ என்ற படத்திற்காக பாடகி லதா மங்கேஷ்கரை தமிழுக்கு அழைத்து வந்தார் இளையராஜா.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடலைப் பாடினார் லதா. இது தான் அவர் நேரடியாகப் பாடிய முதல் தமிழ் பட பாடல். இந்தப் பாடல் குறித்த சுவாரஸ்ய தகவலை பிரபல பத்திரிக்கையில் தெரிவித்திருக்கிறார் பிரபு.
அதில், “எனது அண்ணன் ராம்குமார் தான் ஆனந்த் படத்தில் லதா மங்கேஷ்கர் பாடியே ஆக வேண்டுமென்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார். லதா மங்கேஷ்கர் எங்கள் அழைப்பை ஏற்று இங்கு ஆனந்த் படத்தில் ஆராரோ ஆராரோ பாடலைப் பாடிச் சென்றார்.
அந்தப் படத்தில் அப்பாடலைப் பாடியதற்காக அவர் சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
என் மூத்த அண்ணன் சிவாஜி கணேசனுக்காக பாடுகிறேன் என்று கூறி அப்பாடலை அவர் பாடிச் சென்றார். லதா மங்கேஷ்கரும் அவரது சகோதரிகளும் என் தந்தையின் தீவிர ரசிகைகள்.
அவர்கள் என் தந்தையை அண்ணா என்றே அன்புடன் அழைத்தனர். லதா அவ்வப்போது எங்களுக்கு ஏதேனும் புகைப்படங்களை அனுப்பிவைப்பார். சில நேரங்களில் கடவுளின் புகைப்படங்களை அனுப்பிவைப்பார்.
அவர் மருத்துவமனையில் அனுமதியாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கூட எனக்கு சில புகைப்படங்களை அனுப்பினார்.
கடவுளர், ஷீரடி குரு பாபா, எனது அப்பா என மாறிமாறி இவர்களின் புகைப்படங்களை அனுப்பி வைப்பார்.
எங்களின் அன்னை இல்ல வளாகத்தினுள் ஒரு சிறிய பங்களா இருக்கிறது. அதுதான் எங்களுக்கும் லதா மங்கேஷ்கருக்குமான உறவின் சாட்சி.
சென்னை வரும்போது லதா மங்கேஷ்கர் தங்கிச் செல்வதற்காகவே அதைக் கட்டினார்கள்.
அப்பா இரண்டே மாதங்களில் அதைக் கட்டச் செய்தார். லதா மங்கேஷ்கருக்கு ஓட்டல் உணவு பிடிக்காது. ஆகையால் அம்மாவே அவர் கையில் அவருக்கு சமைத்துக் கொடுப்பார்.
அப்போது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எல்லாம் இப்போது போல் சுலபமாகக் கிடைக்காது என்பதால் அம்மா அவர்களுக்காக ஃப்ளாஸ்கில் சுடு தண்ணீர் கொடுத்து அனுப்புவார்.
லதாவும் பதிலுக்கு தீபாவளி, விழாக்காலங்களில் எங்கள் அனைவருக்கும் துணிகளும், பரிசுகளும் அனுப்புவார். கடந்த தீபாவளி வரை இந்த வழக்கம் நடைமுறையில் இருந்தது” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமீபத்தில் பத்திரிக்கா இணையதளத்தில் வெளியாகியான செய்தியின்படி, லதா மங்கேஷ்கர், முன்னாள் பிசிசிஐ தலைவர் ராஜ் சிங்கை காதலித்துள்ளார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது, அரச பரம்பரையைச் சேர்ந்த ராஜ் சிங் குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், ராஜ் சிங், லதா மங்கேஷ்கரை திருமணம் செய்யவில்லை.
அதேநேரத்தில் வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்யமாட்டேன் எனக் கூறி, அப்படியே வாழ்ந்து காலமானார்.
அதேபோல், லதாமங்கேஷ்கரும் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
தனது கடைசி நிமிடம் வரை லதா மங்கேஷ்கரும், ராஜ் சிங்கும் நல்ல நண்பர்களாகவே இருந்துள்ளனர். லதா மங்கேஷ்கர் திருமணம் செய்து கொள்ளாததற்கு இந்த சம்பவம்தான் காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.
you may like this....