பிரபல நடிகர் திடீர் மரணம்! உடற்பயிற்சி செய்த போது நிகழ்ந்த சோகம்
சீரியல் நடிகர் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி
நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி(46) ஹிந்தியில் குசும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியதோடு, சில சீரியல்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார்.
இவர் 2015ம் ஆண்டு ஈரா என்பவரை திருமணம் செய்து காண்ட நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரி்ந்தனர். பின்பு 2017ம் ஆண்டு மொடல் அழகி அலெசியாவை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர்.
உடலை கம்பீரமாக வைப்பதற்கு ஆர்வம் அதிகம் கொண்ட அவர், உடற்பயிற்சி செய்வது, ஜிம்மிற்கு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி மேற்கொண்ட போது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்தார், உடனே தாமதிக்காமல் அவரது நண்பர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஆனால் சிகிச்சை பலனினறி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.