கணவருடன் சேர்ந்து வாழ்ந்த 25 வருடத்திற்கு சம்பளம் வாங்கிய பெண்! பரபரப்பான தகவல்
கணவர் வீட்டில் 25 வருடங்கள் வேலை பார்த்ததற்கு நஷ்ட ஈடு கேட்டு மனைவியொருவர் வழக்கு பதிவு செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வீட்டிற்காக கனவுகளை அர்ப்பணித்த பெண்
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த "இவானா மாரல் " என்ற பெண்ணொருவருக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவருக்கும் கடந்த கடந்த 1995ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் இடம்பெற்றுள்ளது.
இவர்களுக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில் குறித்த பெண் இவானா கடந்த 2020 ஆம் ஆண்டு விவாகரத்து கேட்டு அப்பகுதியிலுள்ள நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, இவரின் விவாகரத்து வழக்கில் அவர் வெளியில் எங்கும் வேலைக்கு செல்லாமல் தன்னுடைய குடும்பத்திற்காக அவரின் வாழ்க்கையை தியாகம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
1.7 கோடி ரூபாய் ஊதியம் பெறும் மனைவி
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றது.
அந்தவகையில் விசாரணையில், நீதிமன்ற நீதிபதி லவுரா ருயிஸ் அலமினோஸ் அவர்கள் இவானாவிற்கு, 25 வருடங்கள் அவர் வேலைப்பார்த்ததற்கு குறைந்த பட்ச ஊழியமாக ரூ.1.7 கோடி ஊதியமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வீட்டு வேலைகளை சமமாக பங்கீட்டு செய்யவில்லையென்றால் அதிக நேரம் வேலை பார்க்கும் நபருக்கு இவ்வாறு ஊழியம் வழங்கப்படும் எனவும் குறித்த நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள், இவ்வாறு இந்தியாவில் ஒரு சட்டம் இருந்தால் ஆண்கள் எல்லாம் பெண்களுக்கு ஆயுள் முழுவதும் பணம் கொடுக்க வேண்டும் என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.