சிவாங்கியின் லவ்வர் பேரை சொன்ன முக்கிய பிரபலம்! ரியாக்ஷன் கொடுத்த சிவாங்கி!
விஜய் டிவியின் செல்லப் பிள்ளை என்று கூறப்படும் சிவாங்கி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
ஒரு சில படங்களில் பாடி வந்த சிவாங்கி, குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோவில் கோமாளியாக கலந்து கொண்டார்.
3 சீசன்களாக கோமாளியாக இவர் செய்த அலப்பறைகள் அனைவருக்கும் பிடித்துப்போக, மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
image - pxfuel
இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4 இல் குக் ஆக மாறி, கலக்கி வருகின்றார். குக் வித் கோமாளி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள நிலையில், சமீபத்தில் நடிகர் தர்ஷனுடன் லைவ் சேட் செய்துள்ளார்.
அப்போது சிவாங்கி உன் லவ்வர் பேர் சொல்லவா என்று கூறியதும் உனக்கே எல்லாமே தெரியும் மக்களே உருட்டுகிறார் என்று சிவாங்கி ரியாக்ட் பண்ணியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் யாராவது ஒருத்தன் இருப்பான், தேடி கண்டுபிடித்து உன்னை சரிசெய்ய ஒருவன் வருவான் என்று தர்ஷன் கூறியுள்ளார்.
இதற்கு சாம் அல்லது அஷ்வின் தான் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.