மன்னிப்பு கேட்டும் பும்ராவை விடவில்லை... போட்டியின் சண்டையின் உண்மையை உடைத்த அஷ்வின்!
இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது இருந்தது. இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிக்கு பல முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், போட்டியின் போது இங்கிலாந்து அணியினர் பும்ராவை கார்னர் செய்தனர். பும்ராவுக்கு அதிக பவுன்சர்களை போட்டு தாக்கினர். அவர்கள் இப்படி பும்ராவை கட்டம் கட்டியதற்கு முக்கிய காரணம், இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஜேம்ஸ் ஆண்டர்சனை குறி வைத்து ஒரு ஓவர் முழுக்க பவுன்ஸ் பந்துகளாக வீசினார்.
இதில், ஆண்டர்சனுக்கு தோள்பட்டையில் தொடர்ந்து அடி விழுந்தது. இதனால், கடுப்பான ஆண்டர்சன், களத்திலேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மேலும், பும்ராவிடம் வார்த்தைகள் மூலம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். பதிலுக்கு இந்திய கேப்டன் விராட் கோலியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த மோதல், இந்திய அணி 2ம் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யயத் தொடங்கியதில் இருந்து மீண்டும் நீடித்தது.
கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஆண்டர்சன் நக்கலாக சில வார்த்தைகளை விட, சூடான கோலி, பும்ராவை போன்று என்னையும் திட்டலாம் என்று பார்க்கிறீர்களா?.. இது ஒன்னும் உன் வீட்டின் கொல்லைப் புறம் கிடையாது, ஜாலியாக இருக்க என்று பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், பும்ரா - ஆண்டர்சன் மோதலின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதை ரவிச்சந்திரன் அஷ்வின் தனது யூடியூப் சேனலில் அம்பலப்படுத்தியுள்ளார். அதில், முதல் இன்னிங்சில ஆண்டர்சனுக்கு பும்ரா வீசிக் கொண்டிருந்த போது ஆண்டர்சன் பும்ராவிடம், "நீ ஏன் இவ்வளவு வேகமாக எனக்கு பந்துவீசுகிறாய்? நான் அணைக்கு இப்படித் தான் வேகமாக வீசினேனா? இத்தனை நேரம், நீங்கள் 80 m/h வேகத்தில் பந்துவீசிக் கொண்டிருந்தாய். திடீரென்று என்னைப் பார்த்ததும், ஏன் 90 m/h இல் பந்துவீசுகிறாய்?" என்று ஆண்டர்சன் கேட்டதாக அஷ்வின் தெரிவித்துள்ளார்.
ஆட்டம் முடிந்த பிறகு இரு அணி வீரர்க்ளும் ஓய்வறைக்குத் திரும்பிய போது ஜிம்மி ஆண்டர்சனின் முதுகில் செல்லமாகத் தட்டி பும்ரா வேண்டுமென்றே செய்யவில்லை என்று கூற முனைந்தார். பும்ரா அங்கேயே மன்னிப்புக் கேட்டு முடிக்கப்பார்த்தார், ஆனால் ஆண்டர்சன் அவரை அலட்சியப்படுத்தி ஒதுக்கினார்.
பும்ராவை ஆண்டர்சன் அலட்சியப்படுத்தியது அனைவரின் உள்ளிலும் தீயை மூட்டியது. அதன் விளைவைத்தான் 5ம் நாளில் வெற்றியை நோக்கி பாய்ந்தோம்... மேலும் அவர் கூறுகையில். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது என்ன வகையான கேள்வி? நான் ஒப்புக்கொள்கிறேன், பும்ராவின் வேகமான பந்துகளால் அவர் அதிர்ந்து போயிருக்கலாம்.
ஹெல்மெட்டில் அடிபடுவது நிச்சயமாக எளிதல்ல. நான் அவருக்காக பரிதாபம் கொள்கிறேன். ஆனால் அதற்காக ஆண்டர்சன் "நான் உனக்கு வீசினேனா? எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு வீசுகிறாய்?' என்று இப்படி கேட்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
ஆண்டர்சன் சம்பவத்தை இங்கிலாந்து தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டது. ஆனால், இறுதியில் ஏற்பட்ட முடிவு அசாதாரணமானது என்று அஷ்வின் முடித்தார்.