தீக்காயம் ஏற்பட்டால் இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க! பாதிப்பு உறுதி
பொதுவாகவே சமையலின் போதும், துணிகளை அயர்ன் செய்யும் போதும், ஏன் வெந்நீர் குளியலின் போதும் கூட தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கம்.
குறிப்பாக சமைக்கும்போது தெரியாமல் சூடான எண்ணெய் தெரித்துவிட்டாலோ, சுடு தண்ணீர் ஊற்றிக்கொண்டாலோ தீக்காயம் ஏற்பட்டு பெரும் அசௌகரியத்தை உண்டாக்கும்.

பெரிய பாதிப்பு என்றால் உடனடியான மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது அவசியம். ஆனால் சிறிய தீக்காயங்கள் ஏற்படும் நேரங்களில் உடனே என்ன செய்வதென தெரியாது.
இருப்பினும் உடனடியாக ஏதாவதொரு முதலுதவியை செய்ய வேண்டும் என பெரும்பாலானவர்கள் தவறான விடயங்களை செய்கின்றார்கள்.
அந்தவகையில், தீக்காயங்கள் ஏற்பட்டவுடன் என்ன செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யவே கூடாது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

தவிர்க்க வேண்டியவை
தீக்காயம் பட்ட இடத்தில் எரிச்சலை குறைக்க நினைத்து அதில் ஐஸ்கட்டியை வைப்பது ஒருபோதும் செய்யவே கூடாது. இது பாதிக்கப்பட்ட இடத்தை மேலும் சிதைவடைய செய்யும். சாதாரண தண்ணீரில் சுமார் 20 நிமிடங்களுக்கு வைத்திருக்கலாம். இது ஒரு ஆறுதல் உணர்வை கொடுக்கும்.

தீக்காயம் தண்ணீர் சேர்ந்து கொப்புளங்களாக இருந்தால் அதை உடைப்பது அல்லது கிள்ளிவிடுவது போன்ற விடயங்களை செய்யவே கூடாது. அதுவாக குறையும் வரையில் காத்திருக்க வேண்டும். தானாக உடைந்தாலும் துடைத்துவிட்டு உரிய முறையில் சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

சிறிய காயமாக இருந்தால் ஆண்டி பயாட்டிக் மருந்துகளை எடுப்பது தேவையற்றது.தோலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களே அதை சரி செய்துவிடும். அதேபோல் பேண்டேஜ் போடுவதும் கூடாது இது காயத்தின் பாதிப்பை மேலும் மோசமடைய செய்யும்.

முக்கியமாக காயத்தின் மீது வெண்ணெய் தடவுவது, டூத்பேஸ்ட் வைப்பது போன்ற செயல்களை செய்வதை தவிர்க்க வேண்டும். இது தீக்காயத்தின் பாதிப்பை மேலும் வலுவாக்கிவிடும். அதற்கு பதிலாக தீக்காயத்திற்கான ஆயின்மெண்ட் தடவலாம்.
தீக்காயத்தின் போது ஆடைகள் சில வேலை காயத்துடன் ஒட்டிக்கொண்டிருந்தால் அதனை உடனே அகற்றுவதற்கு முயற்சி செய்வது கூடாது. பொறுமையான கையாள வேண்டும். தீக்காயம் பட்டவுடன் காயம் ஏற்பட்ட இடத்தை உடனே துணியில் துடைத்துப்பது கூடாது.

பெரிய காயமாக இருந்தால் முதல் மூன்று நாட்களுக்கு சூரிய வெளிச்சம் படவே கூடாது. வீட்டில் சரிசெய்ய முடியாத காயங்களுக்கு அவசியம் உரிய முறையில் மருத்துவ சிகிச்சையளிப்பது அவசியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |