சிறகடிக்க ஆசை பல குரலா இது? மார்கட்டுக்கு நடுவில் கார்டன் சேலையில் வைப் செய்யும் காட்சி
சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடிக்கும் ப்ரிதா கார்டன் சேலையில் மார்கட்டில் திரியும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியல், கணவன் -மனைவி இடையில் நடக்கும் சண்டைகள் மற்றும் மாமியார் கொடுமை இவை இரண்டையும் கருவாகக் கொண்டு கதைக்களம் நகர்த்தப்படுகிறது.
இதன்படி, கதையின் நாயகனாக இருக்கும் முத்துவை அவரின் அம்மாவுக்கு பிடிக்காது. அதனால் முத்துவை திருமணம் செய்த மீனாவையும் அவருக்கு பிடிக்காது.
பணம் பணம் என அலைந்த மாமியாருக்கு சரியானதொரு பாடத்தை ரோகினி காட்டியதால் கதைக்களம் கடந்த சில வாரங்களாக இதுவே கருவாகக் கொண்டு அடுத்தக்கட்டத்திற்கு செல்கிறது.
மார்க்கட்டில் வைப் செய்த ஸ்ருதி
இந்த நிலையில் நிஜ பணக்காரர் வீட்டில் இருந்து வந்த ஸ்ருதியை தான் வீட்டிலுள்ளவர்கள் அதிகமாக மதிக்கிறார்கள். அதே சமயம், ஸ்ருதியும் மனதில் எதையும் வைத்துக் கொள்ளாது உடனுக்குடன் பேசும் பழக்கம் கொண்டவராக சீரியலில் நடித்து வருகிறார்.
சீரியல் ஒரு பக்கம் பரபரப்பாக சென்றாலும் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள்.
அந்த வகையில், சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரீதா, மார்கட்டில் கார்டன் சேலையில் வைப் செய்யும் காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இந்த காணொளிகளுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது. அத்துடன் “பல குரல் அம்மா..” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |